புதிய கல்விக்கொள்கை: தமிழக அரசு எதிர்க்கவே இல்லை.. எது தரம்? தமிழக சாதனையை சீண்டிய மத்திய அமைச்சர்
சென்னை: புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்க்கவில்லை என்றும், அதை புரிந்துகொள்வதற்கு அவர்கள் முயற்சி செய்து வருவதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்து இருக்கிறார்.
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார், பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக தகுதியான மாணவர்களை உருவாக்கி முடியும்." என்று தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கை
புதிய தேசிய கல்விக்கொள்கை இதற்காகவே கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்தவிதமான கருத்தையும் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.

பேச்சுவார்த்தை
புதிய கல்விக்கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்து உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக புதிய கல்விக்கொள்கையை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம்.

எது தரமான கல்வி?
புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. வெறும் கல்வியறிவும், உயர்கல்வியை பயில்வோர் எண்ணிக்கை மட்டுமே தரமானதாக இருந்துவிடாது. புரிந்துகொள்வதற்கான திறன், கற்றல் வெளிபாடு, வேலைவாய்ப்பை தரும் கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு போன்றவையே உண்மையான தரமாகும்.

இந்தி திணிப்பு அல்ல
புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள மூன்றாவது மொழி இந்தி உள்ளிட்ட வேறு எந்தமொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தாய் மொழிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை இந்தியை திணிக்கவில்லை. மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி கல்விக்கொள்கையை வடிமைக்கிறார்கள். ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்.

3ம் வகுப்பு பொதுத்தேர்வு
புதிய கல்விக்கொள்கை தரமானது அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலமாக மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயரும். தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு கல்வி வழங்கும் விதத்தை முடிவு செய்யலாம். மத்திய மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசி வருகின்றன." என்றார்.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications