தமிழக அரசு ஊழியர்களை விடுங்க.. ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு.. பள்ளிக்கல்வித்துறை திடீர் அதிரடி பாருங்க
சென்னை: ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது.
தமிழக அரசுப்பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளானதுடன், இந்த முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 வருடங்களாகவே போராடி வருகிறார்கள்.
போராட்டம்: சமீபத்தில்கூட, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி, தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தனர்..
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பிறகு, ஆசிரியர் சங்கத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
நெறிமுறைகள்: இந்நிலையில், ஆசிரியர்கள் இடையேயான ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றிக்கையை அனுப்பியிருக்கிறார். அதன் விவரம் இதுதான்:
"பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து நிலை ஆசிரியர்கள், பணியாளர்களில் மூத்தோர், இளையோர் ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்கான பரிந்துரைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
முரண்பாடுகள்: இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பணியில் மூத்தவரின் ஊதிய முரண்பாடு சரிசெய்ய, சார்ந்த அலுவலர் நிலையிலேயே ஆய்வு செய்து உரிய விதிகளின்படி பரிந்துரை அனுப்ப வேண்டும்.
பணியில் மூத்தவர் மற்றும் இளையவர் இருவரின் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் எந்த பக்கமும் விடுபடாமல், சார்ந்த அலுவலர்கள் கையொப்பமிட வேண்டும். ஏற்கெனவே ஊதிய முரண்பாடு சமன் செய்து உத்தரவுவழங்கப்பட்டிருந்தால், அதுகுறித்த நகல்களை கருத்துகளுடன் இணைத்து அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications