சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலை...உச்ச நீதிமன்றத்தில்...தமிழக அரசு கேவியட் மனு!!

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா குழுமம் 1994 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது. இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து விஷ வாயு வெளியேறி வந்ததாகவும், நிலத்தடி நீர் மட்டம் பெரிய அளவில் மாசு அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மாசு காற்றால் புற்று நோய் ஏற்படுவதாகவும். மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், இதனால் சிலர் உயிரிழந்து இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த ஆலையை சுற்றி இருக்கும் கிராமங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

TN government files caveat petition in SC on the verdict of Madras HC on the sterlite plant

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 2018-ல் எதிர்ப்பு கிளம்பியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்டக் குழுவினர் 2018 மே 22ஆம் தேதி அன்று பெரிய அளவில் அமைதியாக ஊர்வலம் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது தேசிய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு 2018-ல் எதிர்ப்பு கிளம்பியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்டக் குழுவினர் 2018 மே 22ஆம் தேதி அன்று பெரிய அளவில் அமைதியாக ஊர்வலம் சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். இது தேசிய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூதுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எழுந்த செய்தியை அடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சாதிப் பிணி ஒழிய.. நம் குரல்கள் ஒன்றுபட வேண்டும்.. ஆத்துப்பாக்கம் சம்பவம் குறித்து கமல்சாதிப் பிணி ஒழிய.. நம் குரல்கள் ஒன்றுபட வேண்டும்.. ஆத்துப்பாக்கம் சம்பவம் குறித்து கமல்

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்துக்களை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

English summary
TN government files caveat petition in SC on the verdict of Madras HC on the sterlite plant
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X