குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரிபார்ப்பில் அதிரடி.. நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் காரணமாக இயல்பு வாழ்க்கையில் கடலோர மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வரும்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவுவதற்காகவே, ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் வாயிலாக அரசு சார்பில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ration registration ration card holders

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுவதால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.. அதேசமயம் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன்தாரர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கைரேகை: இதற்காக அனைத்து கடைகளுக்கும், பிரின்டர் உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.

எனினும், வெளியூர்களில் வசித்து வருவோர், தினக்கூலி வேலைகளுக்குச் செல்வோர், தாங்கள் நேரடியாக ரேஷன் கடை இயங்கும் நேரத்திற்குச் சென்று காத்திருந்து கைரேகை பதிவு செய்ய இயலாமல் அவதிப்பட்டனர்.

கட்டாயப்படுத்தக்கூடாது: இதையடுத்துதான், கைரேகை பதிவிற்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயலால், கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள.. குறிப்பாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருப்பதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மகிழ்ச்சி, நிம்மதி: அதனால்தான், விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், கார்டு ஸ்கேன் செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.

கடந்த திங்கட்கிழமையன்று, பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவில் பிரச்சனை ஏற்பட்டதாக சொன்னார்கள்.. பிறகு, செவ்வாய்கிழமையும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், பொதுமக்களால் ரேஷன் பொருட்களை கடைகளில் வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலைமை ஏற்பட்டது. ஆனால், ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சாப்ட்வேரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் என்று ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+