அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பம் வந்தால் நிராகரிப்போம்.. அமைச்சர் பொன்முடி பரபர!
சென்னை: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை என்றும் அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. அதே போல் ராசாளி கழுகு உட்பட அரியவகை பறவைகளும் இங்கு வசித்து வருகின்றன.

இந்நிலையில், அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசியல் தலைவர்களும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, "அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "வன உயிரின இழப்பு தமிழகத்தில் ஏற்படாத வகையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம்; இயற்கை வளங்களை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications