ரூ.70000 கோடி.. ”நீட்” ஒரு மோசடி! மக்களுக்கு எதிராக ஆளுநர் - மீண்டும் போரை தொடங்கிய அரசு -முரசொலி
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போரை தமிழ்நாடு அரசு மீண்டும் தொடங்கி இருப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: நீட் ஒரு மோசடித் தனமான கல்விக்கொள்கை என்றும் இதனால் தனியார் பயிற்சி மையங்களுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வருவாய் ஆண்டுக்கு கிடைப்பதாக முரசொலி தெரிவித்துள்ளது. நீட் தடை சட்டத்தை ஆளுநர் தடுத்து வைத்திருப்பது சட்டத்துக்கு மட்டுமின்றி மக்களுக்கு எதிரானது என்றும், இதற்கு எதிரான சட்டப்போரை தமிழ்நாடு அரசு மீண்டும் தொடங்கி இருப்பதாக அதன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதில் குறிப்பிட்டு உள்ளதாவது"உச்சநீதிமன்றத்தில் 'நீட்' தேர்வு தொடர்பான சட்டப்போரை மீண்டும் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒன்றிய அரசும் - அதன் பிரதிநிதியான ஆளுநரும் போட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்க வேண்டிய இடம் உச்சநீதிமன்றம்தான் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்து இந்த புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
'நீட்' தேர்வு உச்சநீதிமன்றத்தால் 2017 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. 'நீட்' தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு கோரும் சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை ஒன்றிய உள்துறை திருப்பி அனுப்பியது.

முடிவெடுக்காத ஆளுநர்
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பின்னால் மீண்டும் 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவை நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். ஆளுநர் இதுவரைக்கும் முடிவெடுக்காமல் அப்படியே போட்டு வைத்துள்ளார். 'எந்த முடிவாக இருந்தாலும் உடனடியாக எடுக்க வேண்டும்' என்று நித்தமும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அவர், 'நீட்' விலக்கு சட்டமுன்வடிவை மட்டும் பல மாதங்களாக அப்படியே முடிவெடுக்காமல் போட்டு வைத்திருக்கிறார். ஊருக்கு எடுக்கும் பாடத்தை அவரே கடைப்பிடிப்பது இல்லை!

நிலுவையில் வழக்கு
'நீட்' கட்டாயம் என்ற இந்திய மருத்துவக் கவுன்சில் விதியை எதிர்த்து ஏற்கெனவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் புதிய மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்புக்கு விரோதம்
* மருத்துவப் படிப்புக்கு 'நீட்' தேர்வானது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அதிலும் குறிப்பாக 'நீட்' தேர்வு கட்டாயம் என்பது ஒரு அதிகார வரம்பு மீறலும் அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்று.
* அரசியலமைப்பு வழங்கி உள்ள அடிப்படை உரிமையான சமத்துவத்துக்கு எதிரானது ஆகும்.

மாநில உரிமை
* கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை ஆகும். மாநிலக் கல்வி முறையின் அதிகாரம், மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் மீதான அதிகாரம் என்பது மாநில அரசின் உரிமை ஆகும். 'நீட்' தேர்வானது, மாநிலங்களின் இந்த உரிமையை முற்றிலுமாகப் பறிக்கக் கூடியதாக இருக்கிறது.

தமிழ்நாடு மாணவர்கள் பாதிப்பு
* தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அது சிதைக்கிறது. 'நீட்' தேர்வு என்பதே சி.பி.எஸ்.சி., என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தின் கீழ் வரும் பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு ஏற்ற மாதிரியே கேள்விகள் கேட்கப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்கள் தேர்வு எழுத அதிகம் சிரமப்படுகிறார்கள்.

கிராம்புற மாணவர்கள்
*கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்தாலும் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏனென்றால், பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தால் மட்டுமே அவர்களால் 'நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதே உண்மை ஆகும்.
* பயிற்சி மையங்களில் சேர முடியாததால் நகர்ப்புற மாணவர் களோடும், வசதி படைத்த மாணவர்களோடும் கிராமப்புற ஏழை மாணவர்களால் போட்டி போட முடியாது.

அரசு கல்லூரிக்கு பொருந்தாது
* மருத்துவப் படிப்பு வியாபாரம் ஆதல், முறைகேடுகள், பணம் பறித்தல் ஆகியவை 'நீட்' தேர்வால் தடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவை எதுவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பது இல்லை. தனியார் கல்லூரிகளில் ஒருவேளை நடக்கலாம். முறைகேடுகளைக் களைவதே 'நீட்' என்று சொல்வது, முறைகேடுகள் நடைபெறாத அரசு கல்லூரிகளுக்கு பொருந்தாது. அப்படி இருக்கும் போது அனைத்துக் கல்லூரிக்கும் சேர்த்து தேர்வு வைப்பது பொருத்தம் இல்லாதது இப்படி வலுவான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திமுக அரசின் சட்டப்போராட்டம்
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் 'நீட்' தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசால் நடத்தப்படும் 'நீட்' தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 10.6.2021 அன்று இக்குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஏ.கே.ராஜன் அறிக்கை
86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021 அன்று அறிக்கை அளித்தது. நீட் தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியை பெற முடியவில்லை என்று புள்ளி விபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே- அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது.

நீட் தடை சட்டம்
இதனடிப்படையில் 'நீட்' தேர்வை இக்குழு நிராகரித்தது. இந்த அறிக்கை மீது விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் அமைத்தார். அவர்கள் ஒரு சட்டத்தை வடிவமைத்தார்கள். அதுதான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிரான ஆளுநர்
பல லட்சம் பேரின் எண்ணத்தால் உருவானது இந்தச் சட்டம். கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதி களால் உருவாக்கப்பட்டது இந்தச் சட்டம். இதனை நியமனத்தின் மூலமாக பதவிக்கு வந்த ஆளுநர் தடுத்து வைத்திருப்பது சட்டத்துக்கு மட்டுமல்ல, மக்களுக்கே எதிரானது ஆகும். அந்தத் தேர்வும் ஜனநாயகப் பூர்வமான, ஒழுங்கான, முறைகேடு அற்ற, சமத்துவமான தேர்வு அல்ல. பயிற்சி மையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை சம்பாதித்துத் தரக் கூடிய தேர்வு ஆகும்.

கொள்ளைபுற வழி நீட்
ரூபாய் மூன்று லட்சம் கட்டி - பயிற்சி பெற்று - ஏழில் ஒரு பங்கு மதிப்பெண்ணைப் பெற்று தேர்ச்சிக்குரியவர் ஆகி பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்துவிடும் நவீன கொள்ளைப்புற வழிதான் 'நீட்' தேர்வு. இது ஒரு மோசடித்தனமான கல்விக் கொள்ளை ஆகும். இதனைத் தடுப்பது ஒன்றே எதிர்கால மருத்துவக் கல்விக்கு நன்மை பயக்கும். அதற்கான சட்டப்போரை மீண்டும் தொடங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு." என்று தெரிவித்துள்ளது.
-
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ்












Click it and Unblock the Notifications