அரசு விடுமுறை.. தமிழகம் முழுதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்.. கிடுகிடுன்னு ஏறிய பூ, பழங்கள் விலை
சென்னை: நவராத்திரி பண்டிகையின் நிறைவை கொண்டாடும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.. தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும் ஆயுத பூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான வாழ்த்துக்களும் பரிமாறப்பட்டு வருகின்றன..
தற்போது, 4 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 12 லட்சம் பேர் படையெடுத்துள்ளனர். சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். வீடுகளிலும், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

பண்டிகை: கல்விக்குரிய சரஸ்வதி, செல்வத்துக்குரிய லட்சுமி, வீரத்துக்குரிய பார்வதி போன்றோரை வணங்கக்கூடிய பண்டிகைதான் நவராத்திரி. இந்த பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்களை, முன்வைத்து இன்றைய தினம் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
அதுபோலவே, கல்விக்கு உதவும் சரஸ்வதியை வழிபடும் வகையில், கல்வி உபகரணங்களை வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.. அந்தவகையில், இன்று ஆயுத பூஜை என்பதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.. தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தங்கள் தொழிலுக்கும் உதவியாகவும், அடித்தளமாக விளங்கக்கூடிய கருவிகளை அலங்கரித்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது..
ஆயுத பூஜை: இந்த பூஜைகளில், அவல், பொரி, சுண்டல், பழம் உள்ளிட்டவைகளை சாமிக்கு படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.. இந்த விழாக்களையொட்டி, தமிழக மக்களுக்கு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. தொழில் வளம் சிறக்கவும், கல்வி மேம்படவும் இந்த பூஜை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், இந்த வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.. வாழ்நாள்தோறும் தொழில், கல்வி, ஞானம், கிடைக்க பூஜைகள் நடந்து வருவதுடன், பண்டிகை வாழ்த்துக்களும் பரிமாறப்பட்டு வருகின்றன.
இன்று ஆயுத பூஜை என்பதால், கடந்த 4 நாட்களுக்கு முன்பேயே, இதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டிவிட்டன.. பூஜை பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியவாறே உள்ளது.. இன்றும் கூட்டம் அலைமோதுகிறது.. இதனால், பூக்கள், மற்றும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..
கோயம்பேடு: அதாவது கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் ஆப்பிள் 1 கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையும், மாதுளை, ஆரஞ்ச் ரூ.150 முதல் ரூ.200 வரையும், சாத்துக்குடி ரகத்துக்கு ஏற்ப கிலோ ரூ.60 முதல் ரூ.150 வரையும், கொய்யா, திராட்சை கிலோ ரூ.100க்கும் விற்பனையானது. தேங்காய் ரூ.25லிருந்து ரூ.30க்கும் விற்கப்பட்டது.

இதே போல, பொரி ஒரு படி ரூ.20, உடைத்த கடலை கிலோ ரூ.100, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.120, வாழைக்கன்று இரண்டு ரூ.40, மாவிலை தோரணம் இரண்டு ரூ.20, வெள்ளை பூசணி ரூ.30 முதல் ரூ.50 வரை, தென்னை குருத்தோலை தோரணம் இரண்டு ரூ.25, ரூ.30 ஆகவும் விற்கப்பட்டது.
பூக்கள் விலை: சாமந்தி பூ(1 கிலோ) ரூ.160 முதல் ரூ.180 வரையும், பன்னீர் ரோஸ் ரூ.140 முதல் ரூ.160 வரையும், சாக்லேட் ரோஸ் ரூ.200 முதல் ரூ.220 வரையும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதே போல் மல்லி, ஐஸ் மல்லி மற்றும் முல்லை கிலோ ரூ.600க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூஜை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தபோதும், பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications