மாஸ்! வருகிறது ஸ்பெஷல் ஃபோர்ஸ்.. 383 பணியாளர்களுடன் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்க தமிழக அரசு ஆணை!
சென்னை: தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 383 பணியாளர்களைக் கொண்ட 'தீவிரவாத தடுப்புப் பிரிவு' அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின், 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 'தீவிரவாத தடுப்புப் பிரிவு' அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப் பொருட்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த தீவிரவாத சதிச்செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தான், 'தீவிரவாத தடுப்புப் பிரிவு' அமைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை டிஜிபி, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதத்தையும், இந்த பிரிவை தொடங்குவதற்கான அத்தியாவசிய நிர்வாகச் செலவினங்களுக்காக ரூ.60 கோடி ஒதுக்கக் கோரியும் கடிதம் அளித்திருந்தார். அதனை ஏற்ற தமிழக அரசு, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள், கட்டணங்கள், வாடகை என ரூ.57 கோடி ரூபாய் மற்றும் திரும்பப் பெறப்படாத செலவினமாக தளவாடச் செலவுகளுக்காக ரூ.26 கோடியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதிதாக தொடங்கப்படும் இந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு, தமிழக காவல்துறை நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மேற்பார்வையின் கீழ் செயல்படும் என்றும், இந்த பிரிவு, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்துடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications