கோவில் பணியாளர்களுக்கு அடிச்சது ‘ஜாக்பாட்’: அகவிலைப்படி மேலும் 4% உயர்வு.. தமிழக அரசு கொடுத்த ட்ரீட்
சென்னை: திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 46% ஆக உயர்த்தி கோவில் பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது தமிழக அரசு.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.10.2023 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 46% ஆக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 42% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46% ஆக உயர்த்தியுள்ளது.

அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications