காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல தமிழக அதிகாரிகளுக்கு தடையா? - அரசு மறுப்பு!
சென்னை: காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் முறைப்படி நீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான பரிந்துரைகளை, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வழங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்கள் மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்பதற்காக தமிழக அதிகாரிகள், டெல்லி செல்வது வழக்கம். மேலும், காணொளிக் காட்சி வாயிலாகவும் இந்த கூட்டம் நடைபெறும். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல தமிழக அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் வரும் மே 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியான நிலையில் அந்தச் செய்திக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொளி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக 'காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை' என்ற செய்தி 16.05.2024) பிரபல நாளிதழில் ஒன்றில் வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர்.
மேலும், அந்தக் கூட்டங்களில் நேரில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications