அரசு பஸ்கள் தந்த ஆச்சரியம்.. சென்னையிலிருந்து வெளியூருக்கு இன்று 1000 சிறப்பு பஸ்.. குஷியில் மக்கள்
சென்னை: பொதுமக்களின் நலன் கருதி, ஒவ்வொரு பண்டிகை நாட்களின்போதும், தமிழக போக்குவரத்து கழகம், சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், குட்நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.
அந்தவகையில், இந்தமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன.. அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி: பலரும், ஊட்டி, கொடைக்கானல், போன்ற குளிர்பிரதேசங்களுக்கும், திருச்செந்தூர் வேளாங்கண்ணி, திருவண்ணாமலை, பழனி போன்ற ஆன்மீக தலங்களுக்கும் செல்ல ஆயத்தமாகிவருகிறார்கள். ஆனால், ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். அதனால்தான், இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்தவகையில், சென்னை கோயம்பேடு, மதுரவாயல், தாம்பரம் போன்ற பஸ் ஸ்டாண்டுகளிலிருந்து மொத்தம் 2264 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பையும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல், 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது..
கோயம்புத்தூர்: இதில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகிற 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில், முதல்கட்டமாக, இன்று மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2100 பஸ்கள் இயங்கிவரும்நிலையில், இப்போது கூடுதலாக இந்த 2264 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.. போக்குவரத்து துறையின் இந்த சிறப்பு ஏற்பாடுகள், பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது.
முன்பதிவு: இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் சொல்லும்போது, கோயம்பேட்டில் இருந்து இன்று பல்வேறு நகரங்களுக்கு 1270 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளது.. இதில் 70 சதவீத இடங்கள் ஏற்கனவே நிரம்பி விட்ட நிலையில், நாளை சனிக்கிழமையும் அதிக முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. 50 ஆயிரம் பேர் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications