அரசு ஊழியர்களுக்கு ஷாக்! நாளை பணிக்கு வராமல் போராடினால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு வார்னிங்
சென்னை: தேர்தல் ஆணையத்தின் SIR பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (நவ.18) அடையாள வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் நாளை (நவம்பர் 18) பணிக்கு வராமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவ விடுப்பைத் தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் கடும் பணிச் சுமையில் உள்ளனர். இந்தச் சூழலில அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.
வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான FERA நாளை முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிக்கப்படும் என்று அறிவித்தது. அதுபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைபடுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப்பெற்றிட வேண்டும், புற ஆதாரம் & ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும், நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18 ஆம் தேதி நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை ஊழியர்களும் அறிவித்து இருந்த நிலையில், தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications