பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்... ஆளுநர் ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். பகவான் கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என்று பதிவிட்டுள்ளார்.
பகவான் கிருஷ்ணர் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல அரசியல் கட்சித்தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. பாரத் என்று மாற்றுவதற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆதரவு தரும் வகையில் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். ஆளுநர் ஆர்.என் ரவி நேற்றைய தினம் தனது ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் பாரதம் எனறு குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச்செய்தியில் பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என்று வாழ்த்தியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என் ரவி இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! பகவான் கிருஷ்ணரின் நித்திய போதனைகள் நம் கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் ஆற்ற தொடர்ந்து ஊக்கமளித்து பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம் என்று குறிபிட்டுள்ளளார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications