ஆன்மீக பயணம் போகும் ஆளுநர் ரவி.. இன்று திருவண்ணாமலை செல்கிறார்! விவசாயிகள், மாணவர்களுடன் சந்திப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவி, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் பல்கலைக்கழக நிகழ்வுகள், அரசு நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஆன்மீக பயணமாக திருவண்ணாமலைக்கு செல்ல இருக்கிறார்.

2 நாள் பயணமாக திருவண்ணாமலை செல்லும் அவர், இன்று பகல் 12.30 மணியளவில் சாதுக்களையும், ஆன்மீக குருக்களையும் சந்தித்து பேச உள்ளார். அதை தொடர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்த வள்ளலார் சன்மார்க்க சங்கத்தின் இயற்கை விவசாயிகளை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.
இன்று மாலை ரமணாசிரமத்துக்கு செல்லும் ஆளுநர் ரவி, யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்துக்கு பயணிக்கிறார். அதை தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலில் இரவில் கிரிவலம் செல்ல உள்ளார். இன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நாளை காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
அதை தொடர்ந்து ஆளுநர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களை சந்தித்து ஆளுநர் ரவி உரை நிகழ்த்துகிறார். அதை தொடர்ந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் அவர், அங்குள்ள பழங்குடியின அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.
இறுதியாக செஞ்சிக் கோட்டைக்கும், வெங்கடரமணா ஆலயம் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கிருந்து நேராக சென்னைக்கு திரும்ப உள்ளார். ஆளுநர் ரவியின் இந்த 2 நாள் பயணத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications