ஆளுநர் ரவி மசோதாக்களை திருப்பி அனுப்பவே இல்லையாமே.. பரபர தகவல்.. அடுத்து என்ன நடக்கப்போகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ரவி, மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும், ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் மட்டுமே அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்பங்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தகவல் வெளியானது.

TN Governor RN Ravi withheld assent, did not return bills: What next?

10+ மசோதாக்கள்: ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது மிகவும் தீவிரமான கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கூறியது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. நாளை (நவம்பர் 18) சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். அதன்படி நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஆளுநர் திருப்பி அனுப்பவில்லை: இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்துள்ளார் என்றும், அந்த மசோதாக்களை "மறுபரிசீலனைக்காக" சட்டமன்றத்திற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ "திரும்ப" அனுப்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த பிப்ரவரியில் நீட் விலக்கு மசோதாவையும், மார்ச் மாதத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவையும் ஆளுநர் "திருப்பி" அனுப்பியபோது செய்தது போல், சட்டசபையால் மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடியாது எனக் கூறப்படுகிறது.

மீண்டும் நிறைவேற்ற முடியுமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சட்டங்களை இயற்றுவது தவிர்க்க முடியாதது என்ற தமிழக அரசின் நியாயத்தை விளக்கி, நாளை நடைபெறும் சட்டசபையின் சிறப்பு அமர்வில், மசோதாக்கள் மீதான தீர்மானத்தை ஸ்டாலின் முன்வைப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இயற்றப்பட்ட மசோதாக்களுடன் சட்டசபை தீர்மானம் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின்படி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒரு மசோதாவை ஒப்புதல் வழங்கவோ, ஒப்புதலை நிறுத்தி வைக்கவோ, அல்லது ரிசர்வ் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. நான்காவது ஆப்ஷன், மசோதாவை திருப்பி அனுப்பி சட்டசபையின் மறுபரிசீலனைக்கு கோரிக்கை விடுப்பது ஆகும். ஆளுநர்கள் பொதுவாக "ஒப்புதலை நிறுத்தி வைத்தல்" அதாவது Withholding Assent என்ற விருப்பத்தை பயன்படுத்துவதில்லை என்று மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி.ஆச்சாரி கூறியுள்ளார்.

மசோதா இறந்துவிட்டது: "வழக்கமாக, சில காரணங்களால் மசோதா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட மசோதா சட்டம் ஆவதை விரும்பாதபோது, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் கவர்னர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதலைத் தடுக்கலாம். ஆளுநர் ஏற்கனவே ஒப்புதலைத் தடுத்துள்ளதால், மீண்டும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது உதவாது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநர் ரவி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ஒரு மசோதாவை நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே அர்த்தம் என்று கூறினார். அது மசோதா இறந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. நிராகரித்தல் என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஒரு கண்ணியமான மொழி. வித்ஹோல்ட் என்று சொன்னால், மசோதா இறந்துவிட்டது என்றுதான் பொருள் என்று அவர் கூறினார். அப்போது, ஆளுநர் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.

பெரும் குழப்பம்: ஆளுநர் ரவி, கடந்த மே மாதம் ஒரு நேர்காணலில், பல்கலைக்கழகங்கள் தொடர்பான எட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியிருந்தாலும், அவர் தனது முடிவை சட்டமன்றத்திற்கோ அல்லது மாநில அரசாங்கத்திற்கோ தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, தற்போது ஆளுநர் மாளிகை, ஆளுநர் இந்த மசோதாக்களுக்கு "ஒப்புதல் அளிக்கவில்லை" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் மசோதாக்களை மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அளித்துள்ள நிலையில், மீண்டும் எப்படி மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டாம் முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. ஆனால், திருப்பி அனுப்பப்படாத இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் குழப்பமே நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+