கொரோனா அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த முடியாது.. ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிரடி!
சென்னை: மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
தமிழகத்தில் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு கிராம சபை கூட்டங்களை நடத்தி வந்தது.

கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து வந்தது. இதற்கிடையே கொரோனா தாக்கம் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரியும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, '' மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா சூழலில் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியல்ல. கொரோனா காரணமாகத்தான் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை'' என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 2-ம் வாரத்துக்கு ஒத்தி வைத்தது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications