உளவுத்துறை ஐ.ஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் துயர வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் இவர்தான்!
சென்னை: உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க்கை, உளவுத்துறை ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவ கையில் நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில் வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ் உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு, அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழுவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஸ்ரா கார்க்கை உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது தமிழக அரசு. கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கை, விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications