சென்னை கலரே மாறுது! செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்க.. நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!
சென்னை: சென்னைக்கு அருகில் செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 301 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டு நகரத்தில், நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை, கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான 'சர்வதேச விளையாட்டு நகரம்' அமைக்கப்படும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் சென்னை செம்மஞ்சேரியில் 112 ஏக்கர் பரப்பளவு நிலம் அடையாளம் காணப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்கு 112 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 301 கோடியில் விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் முதல் கட்டமாக 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு நகரத்தில், நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை, கால்பந்து மைதானம், நவீன செய்றகை இழை ஓடுதளம், பல்வேறு உள்அரங்க விளையாட்டுகளை நடத்தும் வகையில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் அமைய உள்ளது.
முதல் கட்டமாக நீர் விளையாட்டுகள், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், வில்வித்தை மற்றும் பல்நோக்கு விளையாட்டு அரங்கல் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது கட்டமாக உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
கால்பந்து மைதானம், வில்வித்தை மைதானம், துப்பாக்கி சுடுதல் மையம், ரோலர் ஸ்கேட்டிங், தடகளம், நீச்சல் மற்றும் BMX போன்ற சர்வதேச விளையாட்டு வசதிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், வீரர்கள் தங்கும் விடுதிகள், உள் விளையாட்டு அரங்கம், புல்வெளிகள், சாலைகள், மழைநீர் வடிகால் ஆகியவை அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கும்.
13 மீட்டர் அகலமும் 1 கிலோமீட்டர் நீளமும் கொண்ட படகு சவாரி வசதி (Boating Track) இதில் இடம்பெறுகிறது. இது இந்தியாவில் ஒரு விளையாட்டு வளாகத்தில் முதன்முறையாக உருவாகும் நீர்விளையாட்டு அமைப்பு என்பதால் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் நீர்வளத்துறை (WRD) இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இது பழைய மகாபலிபுரம் சாலை (OMR) அருகே அமைவதால், சென்னை மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடமாக இருக்கும். ன்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) உடன் இணைந்து இந்த விளையாட்டு நகரத்திற்கு புதிய மெட்ரோ இணைப்பு வழங்கப்படும். விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் மூன்று மாதங்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
ஆவின் பச்சை நிற பால் விற்பனை ரத்து செய்யப்படுகிறதா? - விளக்கம் அளித்த தமிழக அரசு! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்












Click it and Unblock the Notifications