உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.. 'வேந்தராக' தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புல் இன்றி அமைக்க உயர்கல்விததுறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தி உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி எஸ்.கவுரி நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவர் ஓய்வும் பெற்றுவிட்டார்.

இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிடத்தை நிரப்ப தேடுதல் குழுவை நியமித்து கடந்த செப்டம்பர் 6ம் தேதி அறிவிப்பாணையை பல்கலைக்கழகத்தின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டிருந்தார்.
ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், பல்கலைக் கழக மானியக்குழுவின் உறப்பினராக தெற்கு பீகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் HCS ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் துணைவேந்தர் நியமனம் செய்தவதற்கான 3 பேர் பட்டியலை தேர்வு செய்து அளிப்பார்கள் என ஆளுநர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திக், செப்டம்பர் 13ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆளுநரின் பிரிதிநியாகவும், குழுவின் தலைவராகவும் கர்நாடக மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சத்தியநாராயணா, சிண்டிகேட் உறுப்பினராக மாநிலத் திடடக்குழுவின் உறுப்பினர் ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனப்பந்து, செனட் உறுப்பினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன் ஆகியோர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி 6.9.2023 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான நபரை அடையாளம் காண்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவினை அறிவித்தார். மேலும், அது ஆளுநர் மாளிகையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.மேலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உயர் கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலர், யுஜிசி தலைவரின் பரிந்துரையைத் தவிர்த்து, தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் மேலும் அறிவிப்பை வெளியிட்டு, 13.9.2023 அன்று அரசிதழில் முறைகேடான செயலால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைப்பிடிக்காமல் மற்றும் அதை மீறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேடுதல் குழுவில் அரசிதழில் 13.9.2023 வெளியிட்டுள்ள அறிவிப்பு, யுஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானது.உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்தப் பங்கும் இல்லை என்றும், தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Press Release: 63 pic.twitter.com/kswdwULXay
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 26, 2023
இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தர் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு புறம்பாக தேர்வுக்குழுவில் அவரால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினரை நீக்கி கடந்த 13ம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் புதிய அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டதாகவும் அது உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிரானது என்றும் அது செல்லாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அவர்கள், கடந்த 6.9.2023 தேதியிட்ட அறிவிப்பை வெளியிட்டு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான நபரை அடையாளம் காண்பதற்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவினை அறிவித்திருந்தார். மேலும் இதுபற்றி தமிழக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரியப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உயர் கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலர், யுஜிசி தலைவரின் பரிந்துரையைத் தவிர்த்து, தேடல் மற்றும் தேர்வுக் குழுவின் மேலும் அறிவிப்பை வெளியிட்டு, அந்த அறிவிப்பு 13.9.2023 அன்று தமிழக அரசின் அரசிதழில் முறைகேடாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடைப்பிடிக்காமல் மற்றும் அதை மீறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேடுதல் குழுவில் அரசிதழில் 13.9.2023 வெளியிட்டுள்ள அறிவிப்பு, யுஜிசி விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணானதாகும்.
உயர் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலருக்கு பல்கலைக்கழக விவகாரங்களில் எந்தப் பங்கும் இல்லை. தமிழக அரசின் சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்" இவ்வாறு ஆளுநர் மாளிக்கை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications