முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே 'சரக்கு'.. டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சென்னை: முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டும்தான் மதுபானங்கள் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,000-த்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 20 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். தமிழகத்திலும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனாவைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

இரவு ஊரடங்கு நீட்டிப்பு
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜனவரி 31-ந் தேதி வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 2-வது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

வழிபாட்டு தலங்களில் அனுமதி மறுப்பு
ஜனவரி 14-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரத்தில் குடிகாரர்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகிற டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான கட்டுப்பாடுகள் இதுவரை அறிவிக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு
தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது. வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

முக கவசம் கட்டாயம்
மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்கள் முக கவசம், கையுறை அணிவது அவசியம். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணிந்து வரும் நுகர்வோருக்கு மட்டுமே மதுவகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு டாஸ்மாக் கடைகளுக்கான சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications