அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்..ஈட்டிய விடுப்பு பணப்பலன் எப்போ? ரெடியான லிஸ்ட்..ஒன்னு மட்டும் பாக்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெரும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் பதிலுரையிலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் இ எல் எனப்படும் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதில் 15 நாட்களை சரண்டர் செய்தால் அவர்களுக்கு பண பலன்கள் வழங்கப்படும். பல ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் தமிழகத்தில் அமலில் இருந்தது.

ஆண்டு முடிவடையும் நிலையில் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து ஊழியர்கள் அதனை பணமாக பெற்று குழந்தைகளின் கல்வி, திருமணம், மற்றும் பல்வேறு மருத்துவ செலவினங்களுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் பணிக்குச் செல்லாத நிலையில் ஊதியம் வழங்கப்பட்டது.

TN Govt May Allow mk stalin

இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தின் போது தமிழ்நாடு அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் வகையில் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் நடைமுறையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலும் பெரும் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு காத்திருந்தனர். திமுக ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெரும் திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அல்ல, 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் தரலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனாலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மார்ச் மாதம் ஆண்டு நிறைவடையும் என்பதால் அப்போதே சட்டசபை தேர்தல் நடைமுறைகள் துவங்கலாம். எனவே இந்த ஆண்டு ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப் பலன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டமும் ரத்து செய்யப்படவில்லை ஈட்டிய விடுப்பையும் சரண்டர் செய்ய முடியவில்லை என அரசு ஊழியர்கள் பலர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாவிட்டால் அரசுக்கு எதிராக செயல்படுவோம் என பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் அரசு ஊழியர்களும் அதிரடியாக அறிவித்துள்ளனர். இதனால் அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் பதில் உரையிலேயே ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெரும் திட்டம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+