தமிழகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்... தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்தது முதலே பல்வேறு முக்கிய பதவிகளுக்கும் புதிய நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ அரசின் புதிய தலைமை செயலராக வெ இறையன்பு நியமிக்கப்பட்டார்.

TN govt orders to transfer 5 districts collectors

அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ககன்தீப் சிங் பேடி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்,

இந்நிலையில், மதுரை, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணையராக இருந்த சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TN govt orders to transfer 5 districts collectors

சிப்காட் நிர்வாக இயக்குநராக இருந்த அனீஷ் சேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூகநலன், சத்துணவுத் திட்டத் துறை இணைச்செயலராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கடலூர் மாவட்ட ஆட்சியராக பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+