சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்... டிசம்பர் 20 வரை அரசு அவகாசம்
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து இணையதள முகவரியையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தகுதியின் அடிப்படையில், அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அட்டை நகலை இணைத்து www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொது விநியோக திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெறும் அட்டைகளாக உள்ளன. இதில் பெரும்பாலானோர் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அட்டை நகலை இணைத்து www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தகுதி அடிப்படையில் பல அட்டைகள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு அவ்வப்போது வழங்கும் நிவாரணத் தொகை, பொங்கல் பரிசாக கிடைக்கும் 1000 ரூபாய் ஆகியவை சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பெரும்பாலானோர் அரிசி அட்டைதாரர்களாக தங்களை மாற்றிக் கொண்டால் அரசின் பொங்கல் பரிசு அவர்களுக்கும் கிடைக்கும்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அனைத்து அட்டைதாரர்களையும் அரிசி அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications