கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் புதிய சித்த மருத்துவ மையங்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை: கொரோனா தொற்று லேசான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 புதிய இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை வியாசர்பாடியில் டாக்டர் அம்பேதர் அரசு கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், மிதமான கொரோனா தொற்று உள்ளவர்களுக்குதான் சித்தா மருத்துதுவ மையங்கள் தொடங்கப்படுகின்றன.

இங்கு அனுமதிக்கப்படுவோருக்கு கபசுர குடிநீர், அமுக்கர சூரண மாத்திரை உள்ளிட்டவை வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 1140 சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.
தற்போது 12 சித்தா மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. அடுத்த ஒரே வாரத்தில் மேலும் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும். சென்னை ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் அடுத்த வாரம் சித்தா மையம் தொடங்கப்படும் என்றார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியனின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications