நீங்க இனிதான் கவனமா இருக்கனும்.. ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை! எந்த ஒரு மெசேஜையும் மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து இருப்பவர்களில் தகுதியான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கும் தமிழ்நாடு அரசு இறுதி செய்யப்படும் பட்டியலில் இருப்பவர்களை உறுதிபடுத்த ஒரு முயற்சியை கையில் எடுத்து உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.

TN Govt will send SMS to verify final list for Rs.1000 Magalir urimai thogai scheme

கடந்த ஜூலை மாதம் இதற்கு விண்ணப்பிக்கும் முகாம் தொடங்கப்பட்டது. ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் கட்ட முகாம் நிறைவடைந்தது. 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அதன் மூலம் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

2 ஆம் கட்ட முகாம் கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கியது. 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் நடைபெற்ற அந்த கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. 2 முகாம்களிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஆகஸ்டு 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சிறப்பு முகாம் நடத்தியது.

ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் 3 முகாம்களின் மூலமாக வந்து உள்ளன. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், சொந்த பயன்பாட்டுக்கு 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடையாது என்று அரசு அறிவித்தது.

அதேபோல், 3,600 யூனிட்டிற்கும் அதிகமாக ஆண்டிற்கு வீட்டு உபயோக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களின் தலைவிகள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள், மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், உரிமைத் தொகை கோர முடியாது.

அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் என அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களும் உரிமைத் தொகையை பெற முடியாது என்று அரசு அறிவித்தது. சரியான தகவல்கள் விண்ணப்பங்களில் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்களின் வீட்டுக்கு சென்ற ஆய்வு செய்யப்படும் என அரசு அறிவித்தது.

உரிமைத் தொகை ஒரு கோடி பேருக்கு வழங்குவது என அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ள நிலையில் விண்ணப்பங்களை ஆய்வு செய்து கூடுதலாக இருக்கும் 63 லட்சம் பேரை வடிகட்டுவதற்காக வீடு வீடாக அரசு ஆய்வு மேற்கொண்டு தகுதியற்ற விண்ணப்பதாரர்களை நீக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் முதற்கட்ட பட்டியலும், அதன் தொடர்ச்சியாக இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிப்பட்டியில் இடம்பெறும் பயனாளர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதன் மூலம் அவர்களின் எண்கள் சரிதானா? வங்கிக்கணக்கு எண் சரியாக வழங்கப்பட்டு உள்ளதான் என சோதிக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+