"நிறுத்தி வைப்பு or வாபஸ்.." எது நமக்கு தேவை.. வந்து விழுந்த கேள்வி.. வீரமணி அளித்த பளீச் விளக்கம்
சென்னை: தமிழக அரசின் 12 மணி நேர மசோதாவுக்குக் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். இதனிடையே கூட்டணிக் கட்சிகள் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சட்டசபையில் சமீபத்தில் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. அதில் தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், சில தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு.. 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும் இதன் காரணமாகவே இந்தச் சட்டம் கொண்டு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்தது.

தமிழ்நாடு மசோதா: அதேநேரம் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாகவே தொடரும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. பொதுவாகத் தமிழக அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சிகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தொழிற்சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து தமிழக அரசுடன் இன்று தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதையடுத்து திமுக கூட்டணிக் கட்சிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
செய்தியாளர் சந்திப்பு: அப்போது அவர்கள் சிபிஎம் பாலகிருஷ்ணன், "தமிழ்நாடு சட்டசபையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அன்றே எதிர்ப்பு தெரிவித்தோம். இருப்பினும், அதை அவர்கள் நிறைவேற்றினர். இந்தச் சட்ட மசோதா செயல்படுத்தப்பட்டால், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே எதிர்ப்பு தெரிவித்தோம்.. இந்தச் சூழலில் தான் அரசு இந்த மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது.
அந்நிய நாட்டின் இருந்து முதலீட்டை ஈர்க்க இதுபோன்ற சட்டங்கள் தேவை என்றார்கள். அந்நிய முதலீடுகளை ஈர்க்க வேண்டியது அவசியம் தான். ஆனால், அதற்காக 150 ஆண்டுகள் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கக் கூடாது. அரசு மக்களுக்கான அரசாகவே இருக்க வேண்டும். மக்களின் உரிமைகளைப் பறிக்கும் அரசாக இருக்கக் கூடாது.
இந்தச் சட்டத்தை நிறுத்தி வைப்பது மட்டுமின்றி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு வந்த ஆபத்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தம் வராமல் இருந்தாலே நன்றாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
வீரமணி: தொடர்ந்து பேசிய விசிக தலைவர் வீரமணி, "தொழிலாளர் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இப்போது தொழிலாளர் வர்க்கத்தைப் போராட்ட களத்திற்குத் தள்ளாமல் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற்றுள்ளனர். இனி போராட வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கு எதிராகப் போராடச் சிலர் இதை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என நினைத்தார்கள். ஆனால், இப்போது அது வாய்ப்பில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ரத்து or நிறுத்திவைப்பு: கூட்டணிக் கட்சிகள் அரசை ஆதரித்தாலும் கொள்கை என்று வந்துவிட்டால் எதிர்ப்பார்கள் என்பதற்கு இது சாட்சி" என்றனர். அப்போது செய்தியாளர் ஒருவர் இதை நிறுத்தி வைப்பதாகத் தானே அறிவித்துள்ளனர், ரத்து செய்யப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "இது அனைவருக்கும் win win சூழல் தான். நிறுத்திவைப்பது என்பதே இப்போது மிக முக்கியமான ஒன்று. இது நல்லதொரு துவக்கம். அரசு இதில் கவனம் செலுத்தியுள்ளது என்பதையே இது காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
கூட்டணி கட்சியினர் மேலும் கூறுகையில், "மற்ற அரசுகளைப் போலக் கொண்டு இது இல்லை. மற்ற அரசுகள் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தால், திரும்பப் பெற மாட்டோம் என்பார்கள். ஆனால், இவர்கள் கூட்டணிக் கட்சிக்குச் செவி சாய்த்துத் திரும்பப் பெற்றுள்ளனர். எனவே திரும்பப் பெற உத்தரவாதம் எல்லாம் தேவையில்லை" என்று கூறினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications