சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களே விழிப்புடன் இருங்க.. தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி..சென்னையை சேர்ந்தவரா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வருகிறது

கொரோனா வைரஸ் உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருவதால் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல் கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்

இந்த வகையில் டெல்டா வகை என்ற கொரோனா வைரஸ் இந்தியாவில் கொரோனா 2-வது அலைக்கு முக்கிய காரணமாக விளங்கியது.

டெல்டா பிளஸ் வைரஸ்

டெல்டா பிளஸ் வைரஸ்

இந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவி புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் முதன்முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பாதிப்புடன் 21 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டிலும் பாதிப்பு

தமிழ்நாட்டிலும் பாதிப்பு

இதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளா, மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னண் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் சென்னையை சேர்ந்தவரா? என்பது குறித்து ஆய்வு வருவதாக டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னண் கூறியுள்ளார்.

அதிக வீரியம் கொண்டது

அதிக வீரியம் கொண்டது

சுமார் ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் முந்தைய வைரஸ் மாறுபாட்டை விட அதிகம் வீரியம் கொண்டது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையை உருவாக்க அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா தடுப்பூசியும் இந்த வைரசுக்கு எதிராக வேலை செய்யாது எனவும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஒவ்வொரு மாறுபாடாக உருமாறி வரும் நிலையில் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே வைரஸில் இருந்து நாம் விலகி இருக்க முடியும்.

English summary
The Tamil Nadu Health Department has said that one person in Tamil Nadu has been diagnosed with the Delta Plus Corona virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X