பீதியை கிளப்பி வரும் புது வைரஸ்.. தமிழக சுகாதாரத்துறை சொல்வது என்ன..?
புதிய தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம் தந்துள்ளது
சென்னை: புதிய கொரோனா வைரஸ் பீதியை கிளப்பி வரும் நிலையில், அதுபற்றி தமிழக சுகாதாரத்துறை விளக்கம் தந்துள்ளது.
இன்னும் கொரோனாவுக்கே விடை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை... இந்தியாவை பொறுத்தவரை இப்போதுதான் மெல்ல மெல்ல தொற்று குறைந்து வருகிறது.
எப்படியும் 2021 ஜனவரியில் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறையும் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

பிரிட்டன்
ஆனால், அதற்குள் வீரியம் அதிகம் கொண்ட இன்னொரு கொரோனா வைரஸ் பிரிட்டனில் இருந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்தந்த நாடுகள் அலர்ட் ஆகி உள்ளன.. இந்தியாவிலும் பிரிட்டனில் இருந்து வரும் ஃபிளைட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... அந்த நாட்டில் வரும் எல்லாருக்கும் கொரோனா டெஸ்ட் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
இதனிடையே தமிழக சுகாதாரத்துறையினர் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை ஏர்போர்ட்டில் இரண்டு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன... இந்த குழுக்கள் பிரிட்டனில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் செய்து வருகிறது... தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த 1,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயப்பட வேண்டாம்
மேலும், அந்த புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல என்று மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்திருப்பதால், பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.. பயப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.. எந்த ஒரு வைரஸும் உருமாற்றம் அடைவது இயல்புதான்.. அதனால் பயம் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாற்றம்
இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது புதிய வகை கொரோனா வைரஸ் அல்ல என்றும், மரபியல் மாற்றம் மட்டுமே அடைந்திருக்கிறது என விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை, இதுவரை 17 முறை கொரோனா வைரஸானது மரபியல் ரீதியாக மாற்றம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை
கொரோனா தடுப்பூசிகளும் ஏற்கனவே உள்ள தடுப்பு நடவடிக்கைகளுமே போதுமானது என இந்திய மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கையூட்டும் அதே வேளையில், ஏற்கனவே, உள்ள தடுப்பு வழிமுறைகளான மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவது, சோஷியல் டிஸ்டன்ஸ் போன்றவற்றை கடைபிடித்தாலே கொரோனா மட்டுமின்றி எளிதில் பரவும் எந்த வைரஸ் பாதிப்பிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications