உச்சி வெயில்! “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க..” மா.சுப்பிரமணியன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெயில் நேரங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நேற்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் சுமார் 40.5 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. வெயில் அதிகரிப்பதால் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில்,

அதிராமபட்டினம்-34.5°C
சென்னை (நுங்கம்பாக்கம்)-35.4°C
சென்னை (மீனம்பாக்கம்)-37.7°C
கோயம்புத்தூர்-36.8°C
கடலூர்-37.0°C
தர்மபுரி-38.2°C
கரூர் பரமத்தி-40.0°C
வேலூர்-40.5°C
மதுரை நகரம்-37.6°C
தூத்துக்குடி-34.0°C
கொடைக்கானல்-20.4°C
உதகமண்டலம் (ஊட்டி)-15.2°C
என வெயில் பதிவாகியிருக்கிறது. கரூர் பரமத்தியில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல வேலூரில் நேற்று பதிவான வெயில்தான், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச வெயிலின் அளவாகும். சென்னையை பொறுத்தவரை, நுங்கம்பாக்கத்தில் வெயில் குறைந்துள்ளது. ஆனால் மீனம்பாக்கத்தில் அதிகரித்திருக்கிறது. மலைப்பகுதிகளான கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் குளிரான வானிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02-05-2025 மற்றும் 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-05-2025 மற்றும் 06-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, மே 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். 03-05-2025 மற்றும் 04-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
மே 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மே 2ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications