40 வயசுல அமுதா செய்த அசிங்கம்! சென்னை சைதாப்பேட்டை வாடகை வீட்டில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பாலியல் தொழில் கும்பல்களுக்கு எதிராகப் பெருநகர காவல் துறையினர் தங்களின் அதிரடி சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக வியாசர்பாடி மற்றும் பெரியமேடு பகுதிகளில் நடத்தப்பட்ட வேட்டையைத் தொடர்ந்து, இப்போது சைதாப்பேட்டையிலும் ஒரு முக்கிய நெட்வொர்க் உடைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து அரங்கேறும் இந்த அதிரடி கைது நடவடிக்கைகள் மற்றும் மீட்புச் சம்பவங்கள், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் பாலியல் தொழில்கள் நடைபெறுவதாக வரும் தகவல்களையடுத்து, போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்..

Chennai Prostitution Case Amudha Saidapet Chennai Police Anti Vice Squad Chennai Crime News

விபச்சாரத்தில் சிக்கும் பெண்கள்

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சம்பவம் இது... வியாசர்பாடி 18-வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீடு ஒன்றில், பெண்களை வைத்து சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தப்படுவதாக சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படையினர் அந்த வீட்டை அதிரடியாக கண்காணித்து சோதனை நடத்தியதில், அங்கு பாலியல் தொழில் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த சட்டவிரோத கும்பலை நடத்தி வந்த திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஹபீஸ் (34) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

மேலும், அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னையில் அதிரடி கைது

அதேபோல 4 நாட்களுக்கு முன்புகூட சென்னை பெரியமேடு பகுதியில் வடமாநில வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்வதாகக் கிடைத்த ரகசிய புகாரின் பேரில், விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், சமூக வலைதளமான வாட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தி ரகசியமாக பாலியல் தொழில் நடத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த விக்கி ஷைனி (33) மற்றும் ராகேஷ் சென் (31) ஆகிய இரு புரோக்கர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சைதாப்பேட்டையில் 40 வயது அமுதா

இந்நிலையில் மீண்டும் ஒரு பெண் சென்னையில் சிக்கி உள்ளார்.. சென்னை சைதாப்பேட்டை சி.ஜ.டி நகர் சூரியம்மாபேட்டை மேற்கு சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண் காவலர்களுடன் அந்த வீட்டை அதிரடியாகக் கண்காணித்தனர். பிறகு போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போதுதான் வீட்டிற்குள் 40 வயது அமுதா சிக்கினார்.

வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம்

வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருபவராம் இந்த அமுதா.. 40 வயதாகும் இவர், கடலூர் மாவட்டம், கம்மியம்பேட்டை ராமலிங்க நகரைச் சேர்ந்தவர்.. இதையடுத்து போலீசார் அமுதாவை சுற்றி வளைத்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்..

அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணையும் பத்திரமாக போலீசார் மீட்டனர்.. அவரை அரசு மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். கைதான அமுதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+