சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு- பிரசாரம் ஓய்ந்தது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் நாளை மறுநாளும் டிச.30-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 27 மாவட்ட ஊராட்சிகளில் 515 வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5090 வார்டு உறுப்பினர்கள், 9624 கிராம ஊராட்சிகளுக்கான தலைவர்கள், 76,746 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.

TN Local Body Elections campaign to end today

முதல் கட்டமாக நாளை மறுநாள் 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4700 கிராம ஊராட்சிகளின் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே 20,000 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணிக்கு பிரசாரம் நிறைவடைந்தது. இதனால் இன்று காலை முதல் இப்பகுதிகளில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர்..

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாளும் 30-ந் தேதியும் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

English summary
Tamilnadu Local Body Elections campaign will be on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X