ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம்? கனவா? நிஜமா? காங்கிரஸ் திட்டம் பற்றி ஜெயரஞ்சன்
சென்னை: ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் ஜெயரஞ்சன்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று பலரும் கூறி வருகின்றனர். அதற்குச் சமமாக ஒரு தேர்தல் அறிக்கையை பாஜகவினால் அளிக்க முடியாது என்று காங்கிரஸ் கூறிவருகிறது.

திமுக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதைப் போல, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் தருவோம் என்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டனர் என்று அதற்குப் பாஜகவில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு கூட , 'ஆயிரம் ரூபாய் பிச்சைப் போட்டால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா?' என்று வாய்த்துடுக்காகப் பேசியதற்குத் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் உண்மையில் காங்கிரஸ் கட்சியால் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் பெண்களுக்கு வழங்க முடியுமா? அந்தளவுக்கு நாட்டில் பொருளாதாரம் உள்ளதா? அதற்கு விடை அளிக்கிறார் தமிழ்நாட்டு திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.

"உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்கிறார்கள். அதற்காக ஜிடிபியின் அளவாகக் காட்டுவதற்கு உதாரணமாக 30 லட்சம் கோடி என ஒரு கணக்கைக் காட்டுகிறார்கள்.
இது சரியான தொகை அல்ல; உதாரணமாகச் சொல்கிறேன். அதைப்போல் 22 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்று ஒரு கணக்கைச் சொல்கிறார்கள்.
இவர்கள் சொல்லும் 30 லட்சம் கோடி என்பதை நாம் கொஞ்சம் பகுத்துப் பார்ப்போம். நம் நாட்டில் எத்தனைக் கோடி மக்கள் உள்ளனர்? அவர்களோடு இந்தத் தொகையை ஒப்பிட்டு தலைக்கு எத்தனை ரூபாய் வருகிறது என்பதை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும்.
நாம், ஜப்பானைத் தாண்டிவிட்டோம், பங்களாதேஷை தாண்டிவிட்டோம், பாகிஸ்தானைத் தாண்டி விட்டோம் என்று சொல்வதில் ஒரு லாபமும் இல்லை. இந்த நாடுகளில் எல்லாம் மக்கள் தொகை நம்மைவிடக் குறைவு. இந்த ஒப்பீடு பயனற்றது.

நாம் இவ்வளவு ஜிடிபி உயர்ந்துவிட்டோம் என்றால், அந்த வளர்ச்சி எல்லா தரப்பு மக்களுக்கும் சமமாகப் போய்ச் சேர்ந்துள்ளதா? உலக பட்டியலில் பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதுதான்.
ஆனால், உலகத்திலேயே பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது என்பதும் உண்மை. எந்தளவுக்கு இந்த ஏற்றத் தாழ்வு உள்ளது தெரியுமா? வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட போது இருந்த ஏற்றத் தாழ்வைவிட, அதிகமானதாக அது மாறியுள்ளது.
பாஜக ஆட்சியில் இந்த நாட்டின் வளங்கள் எல்லாம் விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களிடம் போய் உள்ளது. நாட்டின் வளம் போனால், வருமானமும் அந்தச் சிலரிடம் தான் போய் சேரும். அதுதான் நாட்டுக்கு ஆபத்தானது.
ஆண்டுக்குப் பெண்களுக்கு 1 லட்சம் தருகிறோம் என்று சொல்லும் காங்கிரசின் வாக்குறுதியால் நாட்டுக்கு ஆபத்து இல்லை. ஏனென்றால், அதன் மூலம் நாட்டில் உள்ள பணம் பகிரப்படுகிறது.
அதன் மூலம் சம அளவில் மக்கள் நலன் பெறுகிறார்கள். அதனால், அவர்கள் உழைப்பார்கள். அந்த உழைப்பின் மூலம் நாடு வளம் பெறும். வளர்ச்சி அதிகரிக்கும்.
நாங்கள் வடநாட்டுக்கு நிதியைத் தர வேண்டாம் எனச் சொல்லவில்லை. வறுமையில் உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் நாங்கள் தடுக்கவில்லை.

இலவசங்கள் கொடுத்து நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என மோடி தமிழ்நாட்டில் பேசுகிறார். வடநாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின்சாரம், குடிநீர், கேஸ், மருத்துவம், படிப்பு பற்றி எல்லாம் கவலைப் பட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? மோடி செல்வந்தர்களிடம் நாட்டின் வளத்தைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் அதை மக்களுக்குக் கொடுக்கும் என்கிறது. அது சாத்தியம் தான். ஒரு லட்சம் என்பதைச் சாத்தியப்படுத்த முடியும்" என்று அடித்துச் சொல்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications