Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்கா 329 மணிநேரம் சேலஞ்ச்? 10 இல் பாஜகவுக்கு கண்டம்! வியூகத்தை மாற்றிய மோடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மற்றும் அமேதி தொகுதியைக் கைப்பற்றும் யுத்தத்தைக் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தொடங்கி உள்ளன. அங்கே கடும் போர் நிலவி வருகிறது.

மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் தருணத்தில் ராமர் கோயிலுக்குச் சென்று ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார். கடந்த ஒன்றரை மாதமாக மோடி பிரச்சாரத்தில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.

TN Lok Sabha Election 2024 329 Hours Challenge by Priyanka Gandhi

ஆனால் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் பேச்சுகளை மோடி உட்பட அவரது கட்சியினர் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். அடிப்படையில் பாஜகவின் பிரசாரம் இந்தத் தேர்தல் அதிகபட்சமாக மதம் சார்ந்தே இருந்துள்ளது. அதில் சந்தேகம் இல்லை.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை ராமர் கோயில் விவகாரம் மட்டுமே பாஜகவும் கைகொடுக்கும் விசயம். வேறு எதுவும் இதன் அளவுக்குக் கைகொடுக்காது என்று பாஜக மிகத் தீவிரமாக நம்புகிறது.

ஆனால், அரசியல் வியூகர்கள் என்ன சொல்கிறார்கள்? அயோத்தி ராமர் கோயில் விவகாரம் எந்தளவுக்கு பாஜகவுக்கு உதவ முடியுமோ அந்தளவுக்கு உதவி செய்து விட்டது. இனிமேல் அதை வைத்து அரசியல் அறுவடை செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்கின்றனர்.

கடந்த முறை பாஜக உபியில் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. இந்த முறை எப்படிப் பார்த்தாலும் 70 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இன்றைக்குக் கடைசியாக அரசியல் களத்திலிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய தகவகல் என்னவென்றால், 50 சீட்டுகளுக்குக் கீழாக அந்தக் கட்சி சென்றுவிடும் என்பதுதான்.

கடந்த சில ஆண்டுகள் முன்பு 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' என்று வீரமாகப் பேசிய பிரதமர் மோடி, இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் அப்படி ஒரு முழகத்தை முன்வைக்கவே இல்லை. 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் உள்ள இரண்டு எருமை மாட்டில் ஒன்றை பிடுங்கிக் கொடுத்து விடும்' என்று சொல்கிறார்.

இந்துக்களின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடும் என்கிறார்.

ஆக, இப்போது பிரதமர் அடிக்கடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வந்தால் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்.

கடந்த 2019 தேர்தலில் 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்று பேசிய மோடி இந்த முறை இஸ்லாமிய மக்களை எதிரியாகக் கட்டமைக்கும் அரசியலில் இறங்கி உள்ளார்.

அதைவிட, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து விட்டு ஒரு சாதனையையும் பேசமுடியாத மோடி 2047 என்று நாட்டை வளர்த்துக் காட்டுவோம் என்கிறார். அப்படி என்றால் கடந்த 10 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு விட்டதா?

பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றிப் பேசாத மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பற்றி மட்டும் சாடி வருகின்றார். பிரதமர் சொன்னது உண்மையா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள உண்மைகள் என்ன? என்று ஊடகங்கள் பட்டியல் போட்டு மொத்தம் 20 பொய்களைப் பேசி உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளன.

TN Lok Sabha Election 2024 329 Hours Challenge by Priyanka Gandhi

இந்நிலையில்தான் உபியில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளை இந்த முறை கண்ணும் கருத்துமாக இருந்து காப்பாற்றிவிட வேண்டும் என முனைப்புக் காட்டி வருகிறார் பிரியங்கா காந்தி.

ரேபரேலிக்கும் அமேதிக்கும் வருகின்ற 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்கேயே முகாமிட்டு பிரச்சாரத்தை வலுப்படுத்தும் வேலைகளில் அவர் குதித்துள்ளார்.

அங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்களைக் கூட்டி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கலந்துரையாடி வருகிறார். இந்த முறை நாம் ரேபரேலியை இழந்துவிட்டால், காந்தி குடும்பத்தில் மரியாதையே போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

"2019 நாடு முழுவதும் மோடி அலை வீசியதாகச் சொன்னார்கள். அப்போது கூட காங்கிரஸ் கோட்டையான ரேபரேலியை பாஜகவினரால் கைப்பற்ற முடியவில்லை. அப்படி ஒரு பாரம்பரியத்தை இழக்க விடாதீர்கள்.

பாஜக ஆட்சியில் ரேபரேலி தொகுதி மக்களுக்கு அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. கைவிட்டு விட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் பாடம் சொல்ல வேண்டும். அதற்காக மீண்டும் காங்கிரஸ் கட்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

நமக்கு இன்னும் 329 மணிநேரம் தான் பாக்கி உள்ளது. அதில் 4 மணி நேரம் உறங்குவதற்குப் போக மீதி நேரத்தைத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்துங்கள். நான் மே 18 வரை ரேபரேலியில் இருந்து நகர மாட்டேன். இங்கேயேதான் உட்கார்ந்திருப்பேன்" என்று சபதம் ஏற்றுப் பேசி இருக்கிறார்.

மேலும் அவர், "உங்களை நான் திட்டுவேன். உங்களுடன் சண்டையிடுவேன்.அது நம் கட்சியை வெற்றி பெற செய்வதற்காக. உங்களுக்காக 24 மணிநேரமும் என் வீட்டுக் கதவுகள் திறந்தே இருக்கும்.

இந்தத் தேர்தல் நமது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். உங்களின் இடஒதுக்கீட்டை பாஜக பறிக்கப்பார்கிறது. அதைக் காப்பாற்ற வேண்டும் நாம்" என்று அவர் மக்களிடம் ஆவேசமாகப் பேசி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

மாநில முதல்வர் யோகியால் இந்தப் பிரச்சாரத்தைச் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை என்று வடநாட்டு ஊடகங்கள் எழுதியும் பேசியும் வருகின்றன.

அதாவது 1952 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 1977 இல் நடந்த அவசரநிலைத் தேர்தல். அதன்பிறகு 1996 தேர்தல். அடுத்து 1998 தேர்தல்.

TN Lok Sabha Election 2024 329 Hours Challenge by Priyanka Gandhi

2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய ஆதரவு அலை நாடு முழுவதும் வீசிய போதும், சோனியா காந்தி ரேபரேலியில் வெற்றி பெற்றார்.

அதாவது பாஜக வேட்பாளரை அவர் 1 லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்தார். ஆகவே அதைக் காப்பாற்றும் பொறுப்பு இப்போது பிரியங்கா தலையில் விழுந்துள்ளது.

அப்படிப் பார்த்தால் உபியில் பிரியங்கா அலை வீசுவதாகவே சொல்கிறார்கள். குறைந்தது 10 தொகுதிகளை இந்த முறை பாஜக இழக்க நேரிடும் என்றே செய்திகள் வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+