பாஜகவுக்கு அபாய கட்டமான 6 ஆம் கட்டத் தேர்தல்! டெல்லியை புரட்டிப் போட்ட கெஜ்ரிவால் போஸ்டர்
சென்னை: மொத்தம் 47 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள 6 ஆம் கட்டத் தேர்தல் முடிவுகள் யாருக்கு ஆதரவாக இருக்கும் ? அதிக இடங்களை எந்தக் கட்சி பிடிக்கும்?
நடந்து முடிந்துள்ள இந்த 6ஆம் கட்டத் தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த முறை வெற்றி பெற்ற கட்சிக்கும் சரி, இந்த முறை ஆட்சிக்கு வரப் போகின்ற கட்சிக்கும் சரி இது மிக முக்கியமானது. மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது.

கடந்த கால நிலவரம் என்ன?
2014 அல்லது 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை. ஆனால், பாஜக இந்த இரண்டு தேர்தல்களிலும் 6 ஆம் கட்டத்தில் நிறைய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாகச் சொன்னால் டெல்லியில் உள்ள 7 தொகுதியையும் பாஜக வென்றது.

அதேபோல ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. உபியில் 14 தொகுதிகளில் ஏறக்குறைய 10 இடங்களை பாஜக கைப்பற்றியது. 4 இடங்களை பகுஜன்சமாஜ் கட்சி வென்றது.
கடந்த முறை பகுஜன்சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியிலிருந்தது. இந்த முறை தனித்து நிற்கிறது பகுஜன் சமாஜ். ஆகவே நிலைமை மாறக்கூடும். சமாஜ்வாதியும் காங்கிரசும் வலுவாகக் களத்தில் உள்ளன. அவர்கள் பக்கம் இந்த முறை அதிக சீட்டுகள் போக வாய்ப்புகள் உள்ளன.
சரியாகச் சொன்னால், 47 தொகுதிகளில் கிட்டத்தட்ட 45 சீட்டுகளை பாஜக வென்றிருந்தது. அதாவது 80% க்கும் மேலான இடங்களைக் கைப்பற்றி இருந்தது. இதுதான் கடந்த காலத்தில் நடைபெற்ற 6 ஆம் கட்டத் தேர்தல் கள நிலவரமாக இருந்தது.
பாஜக சறுக்கியது எங்கே? ஏன்?
காஷ்மீரில் பாஜக போட்டியிடவே இல்லை. ஜம்முவில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அங்கே 370 சட்டப் பிரிவு ரத்துக்குப் பிறகு நடந்துள்ள தேர்தல் என்பதால் பாஜகவுக்கு என்ன செல்வாக்கு என்பதை இனிதான் கணிக்க முடியும்.
அடுத்து ஒடிசா. இங்கே பிஜு ஜனதா தளம் தான் மிகப்பெரிய கட்சி. அங்கே நவீன் பட்நாயக் பெரிய தலைவராக உள்ளார். மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. இந்தக் கட்சிக்குத் திட்டத்தட்ட 1 கோடி தொண்டர்கள் உள்ளனர்.
இங்கே பாஜகவுக்கும் பிஜேடி கட்சிக்கும் மிகப்பெரிய 'போர்’ நடந்து வருகிறது. பாஜக அதிக இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை கடுமையாக விமர்சிப்பதுடன், அவரது கட்சியைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் மீதும் அமித்ஷா, மோடி போன்ற இரண்டு தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

'ஒடிசாவை தமிழன் ஆள்வது சரியா’ என்று மோடியும் அமித்ஷாவும் மாறி மாறி கேள்வி எழுப்பினர். மேலும் பூரி ஜெகன்நாதர் கருவறை சாவி களவு போய்விட்டது. அதற்குப் பாண்டியன்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்தனர்.
மேற்குவங்கத்தில் பாஜகவும் மம்தாவும் சம பலத்துடன் உள்ளன. ஜார்கண்ட்டில் பாஜகவுக்கு ஆதரவு குறைந்துள்ளது. ஹேமந்த் சோரன் கைதுக்குப் பின்னர் அவரது மனைவி பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கே அவருக்கு ஆதரவு அதிகம் உள்ளது. கூடவே அங்கே விளையாட்டு வீரர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டங்களால் பாஜக தன் செல்வாக்கை இழந்துள்ளது.

ஹரியானாவில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி மிக வலிமையாக உள்ளது. அது பாஜகவுக்குச் சவாலாக மாறி இருக்கிறது. கடந்த முறை இந்தளவுக்கு பாஜகவுக்கு நெருக்கடி இல்லை.
குறிப்பாகச் சொன்னால், ஒருசில இடங்களில் பாஜக வேட்பாளர்களை மக்கள் திருப்பி அனுப்பக்கூடிய அளவுக்கு ஒரு கொதிநிலை அங்கே நிலவுகிறது.
எனவே கடந்த முறை இங்கே பாஜக 95% வெற்றியைப் பெற்றதைப் போல இந்தமுறை வெல்ல முடியாது. இதே நிலைதான் டெல்லியில். அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வந்த பிறகு அரசியல் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த 2019இல் பாஜக 7 இடங்களையும் வென்றதைப் போல இந்த முறை வெல்ல முடியாது. காரணம், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி. பாஜகவைச் சவால் விடக்கூடிய கன்னையா குமார் டெல்லியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு இணையாக பாஜகவும் பணபலம் படைத்த வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தியுள்ளது.
கிங் மேக்கர் ஆக மாறிய கெஜ்ரிவால்!
டெல்லியில் பிரச்சாரம் எப்படி மாறியுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். கடந்த 2019இல் பிரதமராக மோடி வர வேண்டும், முதல்வராக கெஜ்ரிவால் இருக்க வேண்டும் என்பதில் டெல்லி மக்கள் தெளிவாகவே இருந்தனர்.
ஆனால், இந்த முறை கெஜ்ரிவால் என்ன சொல்கிறார் என்றால்? 'என்னை 2 முறை முதல்வராகத் தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது மத்தியில் உள்ள ஆட்சி என்னைச் சிறைக்கு அனுப்பத் துடிக்கிறது. மக்களாகிய நீங்கள் முடிவு செய்யுங்கள்.
நான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள். இல்லை என்றால் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் யாரைச் சொல்கிறார்களோ அவர்தான் டெல்லியை ஆள்வார். அது தேவையா’ என்று ஒரு பிரச்சாரத்தை முன்வைக்கிறார்.
டெல்லியில் ஆம் ஆத்மியின் போஸ்டர்களில் சின்னத்தைப் போட்டு ஓட்டு கேட்கவில்லை. சிறை கம்பிகளுக்குள் கெஜ்ரிவால் நிற்பதைப் போலத்தான் டெல்லி முழுக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் கெஜ்ரிவால் மீது அனுதாபப்பட தொடங்கி உள்ளனர். இதே நிலைதான் பஞ்சாபில் உள்ளது. அங்கே ஆம் ஆத்மி வலுவாக நிற்கிறது. அங்கேயும் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. காரணம், விவசாயிகள் போராட்டம்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் 47 தொகுதிகளில் முக்கால்வாசி தொகுதிகளை பாஜக அல்லாத கட்சிகள்தான் கைப்பற்றப் போகின்றன. அப்படிப் பார்த்தால் 6 ஆம் கட்ட பாஜகவுக்கு அபாய கட்டமாகவே தெரிகிறது என்று அரசியல் வியூகர்கள் கணித்துக் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications