Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே அணியில் ராஜ்புத்,யாதவ், முஸ்லிம் வாக்குகள்! 40 தொகுதிகளில் பாஜகவுக்கு கண்டம்! குஜராத் - உபி நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உபியில் பாஜக கூட்டணி இந்த முறை 40 தொகுதிகளில் தோல்வியைச் சந்திக்கும் என்று தெரியவந்துள்ளது.

சமூகரீதியாக வாக்குவங்கிக் கணக்கு:

உபியில் இஸ்லாம் 2வது மிகப்பெரிய மதமாக உள்ளது. மாநிலத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 19.26% பேர் உள்ளனர்.

TN Lok Sabha Election 2024 Crisis for BJP in 40 constituencies in UP

ராம்பூர் மாவட்டத்தில் 50.6% மக்கள் உள்ளனர். மொராதாபாத்தில் 47.12% பேர். பிஜ்னோரில் 43.0% பேர். சஹாரன்பூரில் 42.0% பேர்.

இப்படி மொத்தமாக 10 மாவட்டங்களில் முஸ்லிம் மக்கள் குறைந்தது 30% மேல் உள்ளனர். இந்த வாக்குகள் முழுக்க இந்தியா கூட்டணிக்குப் போக இருக்கிறது.

அதைப்போல யாதவ் சமூக மக்களின் மக்கள் தொகை சராசரியாக 11% உள்ளது. இது கூட பழைய புள்ளிவிவரம்தான். புதிய கணக்கெடுப்பு எடுத்தால், இன்னும் கூடுதலாக இருப்பார்கள்.

அடுத்ததாக தாக்கூர் மற்றும் ராஜ்புத் மக்கள் 10 முதல் 13% வரை உள்ளனர்.

காஜியாபாத், கவுதம் புத்த நகர், மீரட், சஹாரன்பூர், முசாபர்நகர், கைரானா, பிஜ்னோர் ஆகிய இடங்களில் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த ராஜ்புத் மக்கள் உள்ளனர்.

TN Lok Sabha Election 2024 Crisis for BJP in 40 constituencies in UP

ஆகவே, இந்தத் தொகுதிகளில் எல்லாம் பாஜக கூட்டணி சரிவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி உபியில் 40 தொகுதிகளில் சரிவைச் சந்திக்கும் என்கிறார்கள். இந்த 40 இடங்களிலும் மிக எளிமையாக இந்தியா கூட்டணி வெற்றிவாகை சூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உச்சகட்டத்தில் மோடியின் வெறுப்பு அரசியல்:

இது குறித்து திராவிட சிந்தனையாளர் வல்லம் பஷீர் சில கருத்துகளைத் தெளிவுபடுத்தி உள்ளார். அவரும் இந்தியா கூட்டணிக்கு எங்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதை விளக்கிக் கூறியுள்ளார்.

இது பற்றி வல்லம் பஷீர், "பாஜக கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை வடக்குத் தெற்கு என்று நிதி பகிர்வு மூலம் தனித்தனியாகப் பாரபட்சம் காட்டி பிரித்துப் பார்த்து வருகிறது. அவர்களின் நிதி பகிர்வே அதற்குச் சாட்சி.

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே தந்தார்கள். அதுவும் கூட நிதி ஒதுக்கப்படாமல், வெற்று அறிவிப்போடு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

TN Lok Sabha Election 2024 Crisis for BJP in 40 constituencies in UP

மோடி முகலாயர்களைப் பற்றி தனது தேர்தல் பரப்புரையில் பேசுகிறார். ராகுல் ஏன் முகலாயர்களை விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார். முகலாயர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டார்கள். அவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களா? அவர்கள் மோடியைப் போலப் பிரிவினைவாதம் பேசினார்களா? இன்று முகலாயர்களின் வாரிசுகள் இருக்கிறார்களா?

அப்படி உள்ள போது இன்றைக்குத் தேர்தல் களத்தில் மோடி ஏன் அவர்களைப் பேசுகிறார்? பெரும்பான்மைவாதம் மூலம் சிறுபான்மையர்களை அச்சுறுத்துகிறார். அது தவறில்லையா?

ராகுல்காந்தியின் பேச்சுக்காக உடனடியாக அவரது வயநாடு மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால், மோடியின் வெறுப்பு பிரச்சாரத்தைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இன்றைக்குத் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சொல்லவில்லை. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் சொல்கிறார்கள்.

TN Lok Sabha Election 2024 Crisis for BJP in 40 constituencies in UP

காங். வெற்றிக்கு உதவும் ஆம் ஆத்மி:

ராஜ்புத் மக்களின் பிரச்சினை என்பது 11 மாநிலங்களில் எதிரொலிக்கின்றது. மிகக் குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மேற்கு பகுதி தொடங்கி மத்திய உத்தரப்பிரதேசம் வரை இந்த மக்களின் ஆதிக்கம் இருக்கிறது.

குஜராத்தை எடுத்துக் கொண்டால் 17 தொகுதிகளை எடுத்துக்கொண்டால் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இந்த ராஜ்புத் மக்கள் உள்ளனர். இந்த மக்களின் வாக்குவங்கி பாஜகவுக்கு எதிராகப் போய் உள்ளது. அந்தக் காரணத்தால்தான் பாஜக பதறுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் 18 தொகுதிகளில் 25 வாக்குகள் தொடங்கி 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த முறை இந்தக் கட்சியின் வாக்குவங்கி உயர்ந்துள்ளது.

அதற்குக் காரணம், அரவிந்த் கெஜ்ரிவால் கைது. ஆகவே இந்த ஒட்டுமொத்த வாக்குகளும் இந்தத் தேர்தலில் அப்படியே 'இந்தியா' கூட்டணிக்குப் போகப்போகிறது.

அதைப்போல கடந்த முறை 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி குஜராத்தில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாக்குகளைக் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவி இருந்தது. ஆகவே, அந்த இடைவெளியே இந்த முறை ஆம் ஆத்மி நிரப்பும்.

அப்படிப் பார்த்தால், இந்த முறை குஜராத்தில் பாஜக குறைந்தது 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வாக்குகள் வரை குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவும் என்பது உண்மை. அதுதான் தேர்தல் கணக்கு.

அதனை அடுத்து ராஜ்புத் மக்கள். சில தொகுதிகளில் இந்த மக்கள் 13% வாக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு பாஜகவுக்கு விழவே வாய்ப்பில்லை. ஆகவே இயற்கையாகவே இந்தியா கூட்டணி வெற்றி பெறும்." என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+