விவிபேட் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இதை ஏன் கவனிக்கல? பாயிண்டை பிடித்த ஷ்யாம்
சென்னை: அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அது தொடர்பான சில கருத்துகளைப் பத்திரிகையாளர் ஷ்யாம் முன்வைத்துள்ளார்.
அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

அதனை விசாரித்து வரும் நீதிமன்றம் தேர்தல் முடிவதற்குள் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிவந்தது. .
ஆனால், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.
மேலும் இந்த விசாரணையின் போது நீதிபதி, 'நீதிமன்றத்தைப் போன்று தன்னாட்சி பெற்ற அமைப்புதான் தேர்தல் ஆணையம். அதன் சுதந்திரத்திற்குள் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும்?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பேச்சு இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்நிலையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் முழுவதுமாக எண்ணக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய 100 மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதோடு மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவரக் கூறி உத்தரவிட முடியாது என்றும் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பான தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். அவர் இந்தத் தீர்ப்பு மனவருத்தத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து தராசு ஷ்யாம், "உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எனக்கு ஏமாற்றமளிக்கிறது. வாக்காளர் சரி பார்க்கக் கூடிய காகித தணிக்கைத் தடம் என்பதுதான் விவிபேட்.
தமிழ்நாட்டில் 2014இல்தான் முதன்முதலாக விவிபேட் என்பது மத்திய சென்னையில்தான் பயன்படுத்தப்பட்டது.

அதற்கு முன்னால் இவிஎம் இயந்திரத்தில் ஓட்டுப் போடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டு, உண்மையில் ஓட்டு பதிவானதா? இல்லையா? என்ற குழப்பம் தான் மக்களிடம் இருந்தது.
அப்படி ஒரு குழப்பம் வாக்காளர்களிடம் நிலவியதால்தான் உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில்தான் இந்த விவிபேட் முறையே கொண்டுவரப் பட்டது.
நீதிமன்றம் இப்போது பழையபடி வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப முடியாது என்று சொல்லி இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
விவிபேட் எந்திரத்தின் பொருத்தப்பட்டுள்ள எம்பேட் சாஃப்ட்வேரை வைத்து தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு முன் ஒரு மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும் இன்று வெளியான தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தான் ஒரு சாதகமான அம்சமாகவே நான் பார்க்கிறேன். அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் கூட விவிபேட் நடைமுறையில் உள்ளது. 27 மாவட்டங்களில் அமலில் உள்ளது என்றே நினைக்கிறேன்.
அமெரிக்காவில் 20% வரை விவிபேட்டில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுகிறார்கள்.
ஆனால், நமது உச்சநீதிமன்றம் 2% எண்ணினால் போதும் எனச் சொல்லி உள்ளது என் மனதிற்குச் சரியாக எனக்குப் படவில்லை. 2% என்பது மிகமிக குறைவு என்றே சொல்வேண்டும்.
தேர்தலில் தேவை என்ன? சுதந்திரமாகத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்பதைச் சாதாரண வாக்காளரும் உணர வேண்டும். அதுதான் சரியான தேர்தல்.
ஒரு தொகுதியில் தேர்தல் சரியாக நடைபெறவில்லை என்று யாரேனும் கிளப்பினால், மறு எண்ணிக்கைக்கான செலவை அவரே ஏற்கவேண்டும் என இந்தத் தீர்ப்பு சொல்கிறது. அது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்பது என் வாதம்.
ஒரு வேட்பாளருக்குச் சந்தேகத்தை எழுப்புவதற்காக உரிமை உள்ளது. அவர் போட்டியிடுகிறார். அதில் ஏதேனும் குளறுபடிகள் என நினைத்தால் அவர் மறு எண்ணிக்கையைக் கேட்கலாம்.
அதற்கான செலவை அவர் ஏற்க வேண்டும் என்றால் அது எப்படி சுதந்தரமான தேர்தலாக இருக்க முடியும்?

2019 தேர்தலில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் விவிபேட்டில் இருந்த ஒப்புகைச் சீட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.
இந்தியா முழுவதும் 75 தொகுதிகளில் வித்தியாசம் இருந்ததாக உச்சநீதிமன்றத்திலேயே இந்த வழக்கின் போது சமர்ப்பித்திருந்தார்கள்.
அதை எல்லாம் உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது" என்கிறார்
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications