இருக்கு ஆனா இல்ல? சூரி முதல் ஜெயக்குமார் வரை.. ஓட்டு உரிமையை இழந்த பிரபலங்கள்!
சென்னை: திரைத்துறையினர் சிலருக்கு ஓட்டு இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு பக்கம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்று சொல்லப்படும் நிலையில், இன்னொரு பக்கம் பல வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் திரும்பி உள்ளனர்.
இந்தப் பிரச்சினையைச் சாதாரண சாமானியன் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை சந்தித்துள்ளனர். என்ன நடந்தது? என்ன பிரச்சினைகள் ஏற்பட்டன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கடந்த முறை சைக்கிளில் வந்து கூலாக வாக்களித்துவிட்டுச் சென்ற விஜய், இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தனது முதல் வாக்கைப் பதிவு செய்யத் துபாயிலிருந்து பறந்து வந்தார்.
அவர் வருவாரா? மாட்டாரா? என்று சமூக வலைத்தளத்தில் பெரிய பட்டி மன்றமே நடந்தது. அதற்குக் காரணம், அஜித். அவர் வழக்கம் போலக் காலையிலேயே பொறுப்பாக முதல் ஆளாகக் கிளம்பி வந்து வாக்களித்து விட்டுச் சென்றார்.
அந்தப் படங்களை எடுத்துப் போட்டு அஜித் ரசிகர்கள் விஜய்யை ஒரண்டை இழுக்க ஆரம்பித்தார்கள். அதற்குச் சரியான நேரத்தில் வந்து சரியான பதிலைக் கொடுத்தார் விஜய்.

ஆனாலும் ரசிகர்கள் சண்டை அனல் குறையவில்லை. அஜித் பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் ஸ்டைலாக உள்ளதாகவும் நடிகர் விஜய் சோர்ந்து போய் பரட்டை தலையுடன் உள்ளதாகவும் படங்களை எடுத்துப் போட்டு உருவக் கேலியில் இறங்கியது ஒருசில கும்பல்.
கடந்த தேர்தலின் போது கருப்பு சிகப்பு சைக்கிளில் வந்து வாக்களித்திருந்தார் விஜய். அது மிகப் பெரிய அளவு பேசப்பட்டது. எப்போதும் விஜய் பாணியை அப்படியே காப்பி அடிக்கும் விஷால், இந்த முறை வாக்குச்சாவடிக்குச் சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டார்.
ஆனால், அது விஜய் அளவுக்குப் பெரிய செய்தியாக மாறவில்லை.
அதன்பின்னர் ரஜினி, கமல், தனுஷ், குஷ்பு, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி, அனிருத், வெற்றிமாறன், த்ரிஷா, சூர்யா, கார்த்தி, அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், இளையராஜா, கருணாஸ் என்று திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து வாக்களித்துவிட்டுச் சென்றனர்.

கடந்த முறை 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
ஆனால், அதை மீறி அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். ஆகவே அது சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இந்தமுறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் வாக்களித்துவிட்டுச் சென்றார்.
இவரைப் போலவே கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் பெயரில் யாரோ கள்ள ஓட்டுப்போட்டு விட்டுச் சென்றிருந்தனர். அவர் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது அவரது ஓட்டு முன்பே போடப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஏமாற்றத்துடன் வெளியே வந்த கமல், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாகக் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த முறை கமல்ஹாசனின் ஓட்டு காப்பாற்றப்பட்டு இருந்தது. யாரும் கள்ள ஓட்டுப் போடவில்லை. ஆகவே மகிழ்ச்சியாக வாக்களித்தார் கமல்.
நடிகர் டி. ராஜேந்தர், நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தார். வழக்கம் போல் மயிலு, குயிலு, ரயிலு என்று அவர் ரைமிங் ஆகப் பேசுவது குறையவில்லை. உடல்நிலை சரியானதற்குக் கடவுள்தான் காரணம். நான் உங்கள் முன் நின்று பேசுவதற்குக் கடவுள் தான் காரணம் என்று வார்த்தைக்கு வார்த்தை கடவுள் என்றார்.
நடிகர் சூரியைப் போலவே தனது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயரும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி உள்ளார் முன்னர் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
அது பற்றி ஜெயக்குமார், "எனது வாக்குரிமையைச் செலுத்துவதற்காக வந்தேன். ஆனால், என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

எல்லா தேர்தல்களிலும் எனது ஜனநாயகக் கடமையை நான் சரியாகச் செலுத்தி வருகிறேன். இந்த முறை அது தடைப்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.
ஒரே வீட்டில், ஒரே முகவரியில் உள்ள எனக்கு ஓட்டு இல்லை. ஆனால் என் மனைவிக்கு ஓட்டு இருக்கிறது. ஏதோ தவறு நடந்துள்ளது என்கிறார். ஒரு பூத்தில் பெயர் இல்லை என்றதும் அடுத்த பூத்து போய் விசாரித்தேன் அங்கேயும் என் பெயர் இல்லை.
ஏதோ விடுபட்டுப் போய் உள்ளது. 15 ஆண்டுகளாக ஓட்டுப் போட்டேன். ஆனால் இப்ப ஓட்டு இல்லை" என்று வேதனையோடு பேசியுள்ளார் நடிகர் சூரி.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நடந்த தேர்தலில் சசிகலாவுக்கு வாக்கு இல்லை என்று சொல்லித் திரும்ப அனுப்பப்பட்டார். அதே பிரச்சினையை இப்போது ஜெயக்குமார் குடும்பம் சந்தித்துள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், "வாக்காளர் பட்டியலில் பலரது பெயர் இல்லை என்று சொல்கிறார்கள். நிறையப் புகார்கள் வருகின்றன. இன்னும் ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்கிறேன்.
என் வீட்டிலேயே சிலருக்கு ஓட்டு இல்லை என்று சொல்லித் திரும்ப அனுப்பி இருக்கிறார்கள்.

என்னுடைய மருமகனுக்கு ஓட்டு இல்லை. என் வீட்டிலேயே மருமகளுக்கு ஓட்டு இல்லை. அதைப்போல என் பேரனுக்கு ஓட்டு இல்லை. இதை எல்லாம் நான் எங்கே போய் சொல்வது? நிறைய வீடுகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார்கள்.
ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இல்லை. இந்தத் தேர்தலில் இப்படிப் பல அதிசய நிகழ்வுகள் எல்லாம் நடந்துள்ளது.
ஒருவரின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான உரிமையைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டில் ஒருவருக்கு கூட வாக்கு இல்லை என்ற நிலை இல்லாமல் செய்ய வேண்டும்.
100% வாக்குரிமையை முறையாக ஏற்படுத்தித் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை" என்கிறார்
-
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications