காங்கிரசா? பாஜகவா? எந்தக் கட்சியில் கிரிமினல் வழக்கு வேட்பாளர்கள் அதிகம்? ரிப்போர்ட் ரெடி
சென்னை: நடைபெற்று வரும் 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் வேட்பாளர்களை அதிகம் நிறுத்தியுள்ளது என்பது பற்றிய ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.
இன்று 5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் 8 மாநிலங்களில் உள்ள மொத்தம் 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முதல் நான்கு கட்ட பொதுத் தேர்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த 5 ஆம் கட்டத் தேர்தலில் மக்கள் இன்னும் ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வருவார்கள் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இன்று மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று 5 ஆம் கட்டத்தேர்தலில் நடைபெற்று வருகின்றது.
இதில் பல்வேறு கட்சியின் வேட்பாளர்கள் போட்டிப்போடுகின்றனர். குறிப்பாக பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, என்சிபி எனப் பல கட்சிகள் களத்தில் உள்ளன.
இந்நிலையில் இந்த 5 ஆம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களில் எந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன என்பது பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது களத்தில் குற்றப் பின்னணி கொண்ட கணிசமான வேட்பாளர்கள் எந்தக் கட்சியில் அதிகம் உள்ளனர் என்பது பற்றிய அறிக்கை ஒன்றை ஏடிஆர் அமைப்பால் பகுப்பாய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் செய்யப்பட்ட மொத்தம் 695 வேட்பாளர்களில் 159 பேர் தங்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேட்பாளர்களில், 58 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் மீது கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர். இவர்களில் 45 பேர் மீது கடுமையான வழக்குகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
மேற்கொண்டு பாஜகவில் உள்ள 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதைப்போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 வேட்பாளர்கள் தங்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
அப்படிப் பார்த்தால் பாஜக மற்று காங்கிரஸ் கட்சியில் தலா 8 வேட்பாளர்கள் இந்த 5 ஆம் கட்டத் தேர்தலில் களத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தலா 8 வேட்பாளர்களைக் கொண்டுள்ள பாஜகவும் காங்கிரசும் இந்தப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் மொத்தம் 7 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ள நிலையில், பாஜகவிடம் அதேபோன்ற 6 வேட்பாளர்கள் வழக்குகள் உள்ளன.
பகுஜன்சமாஜ் கட்சியில் உள்ள 19 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. இவர்களில் 12 பேர் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்
வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சி வேட்பாளர்களில் 5 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் 4 வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களில் தலா 3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மாநிலங்கள் வாரியாகப் பார்த்தால், மகாராஷ்டிரா மொத்தம் 62 குற்ற வழக்குகளைக் கொண்டுள்ள வேட்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அவர்களில் 45 பேர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். அடுத்ததாக உத்தரப் பிரதேசத்தில் 29 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 26 பேர் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் குற்ற வழக்குகளின் பின்னணி உடையவர்கள் மொத்த 21 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 19 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
பீகாரில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில் 13 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜார்க்கண்டில், 18 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 9 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஒடிசாவில் கிரிமினல் வழக்குகளுக்கு ஆளாகியுள்ள 12 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களில் 8 பேர் மீது கடுமையான வழக்குகள் நடைபெற்றுவருகின்றன. . ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிரிமினல் வழக்குகள் உள்ள இரண்டு வேட்பாளர்கள் உள்ளனர் என்றும் இவை அனைத்தும் தீவிரமானது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த 5 ஆம் கட்ட தேர்தலில் லடாக்கில் அத்தகைய கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வரும் வேட்பாளர் யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள எத்தனை வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் செல்ல இருக்கிறார்களோ?
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications