Form 17C உள்குத்துகள் என்ன? Symbol loading unit தில்லுமுல்லுகள்? ரகசியத்தை உடைத்த பொன்ராஜ்
சென்னை: தேர்தல் ஆணையம் Form 17C இல் உள்ள தரவுகளை இணைய தளத்தில் வெளியிட மறுப்பு தெரிவித்தது குறித்து பல்வேறு சந்தேகங்களை அரசியல் விமர்சகர் பொன்ராஜ் எழுப்பியுள்ளார். இதனால் என்ன குளறுபடிகள் ஏற்படக் கூடும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதற்குப் பதிலளிக்க முன்வந்த தேர்தல் ஆணையம் Form 17C இல் உள்ள தரவுகளைத் தேர்தல் ஆணையத்தில் இணைய தளத்தில் பதிவேற்ற முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றமும் தேர்தல் நடந்துவரும் வேளையில் இந்தத் தரவுகளைக் கேட்பது முறையல்ல; தேர்தல் முடியும் வரை ஆணையத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால், இந்தப் படிவம் 17 சி வழக்கமாகத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபடுவதுதான். இந்த முறைதான் இப்படிப் புதுப்புது பிரச்சினைகள் எல்லாம் முளைத்துள்ளன என்று எதிர்க்கட்சியினர் வாதிட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் இந்த நடவடிக்கை ஆளும் பாஜக அரசுக்குச் சாதகமாகவே உள்ளது என்கிறார் அரசியல் விமர்சகர் பொன்ராஜ். அவர் இதுவரை இந்த நடைமுறை எப்படிக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது? அதில் இந்த முறை குளறுபடிகள் என்ன என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
Returning officer handbook ஏன் உள்ளது?
இந்த படிவம் 17 சி சர்ச்சை பற்றி பொன்ராஜ், "தேர்தல் ஆணையம் முன்வைக்கும் வாதங்களைக் கேட்டால் என்ன சொல்வது என்றே புரியவில்லை. தேர்தலில் பதிவாக வாக்கு சதவீதத்தை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்றே புரியவில்லை?
பதிவான வாக்குகளைச் சொன்னால் தேர்தல் நடைமுறை கெட்டுப் போய்விடும் என்கிறது தேர்தல் ஆணையம். மொத்த வாக்குகளின் எண்ணிக்கையைச் சொன்னால், ஆணையத்தின் நம்பிக்கையே கெட்டுப் போய்விடும் என்கிறார்கள்.
எந்தத் தரவுகள் எல்லாம் நம்பிக்கையை அதிகப்படுத்துமோ அதை எல்லாம் சொன்னால் நம்பிக்கை கெட்டுவிடும் என்கிறார்கள் தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள்.

இந்தக் கருத்துகளை எல்லாம் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் சொல்லும் பொய்களை எல்லாம் விசாரிப்பதற்குப் பதிலாக ஏற்றுக் கொள்வது என்பது என்ன மாதிரியான அணுகுமுறை என்றே புரியவில்லை.
Form 17C என்பது எதற்கு இருக்கிறது? Returning officer handbook என்பதை ஏன் போட்டிருக்கிறார்கள். அதற்காகச் சட்டத்தை ஏன் உருவாக்கினார்கள்?
தேர்தல் ஆணையம் 2023 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள handbook இல் 13.47.2 விதியின் படி, வாக்களிப்புக்கான நேரம் முடிந்துவிட்டது.
இனிமேல் யாரும் வாக்களிக்க முடியாது என்று நிறைவு செய்யும் போது, வாக்குச்சாவடியில் உள்ள அனைத்துக் கட்சி முகவர்களின் முன்பாகவும் close button ஐ அழுத்துவார்கள்.
அப்படி அழுத்தும் போது அதில் மொத்தமாக எத்தனை வாக்குகள் பதிவாகி உள்ளது என்பதற்கான எண்ணிக்கையை அந்த மிஷின் காட்டும்.
அந்த எண்ணை அப்படியே Form 17C உள்ள பார்ட் 1ல் 6வது காலத்தில் பதிவு செய்வார்கள். இந்தப் படிவத்தில் அனைத்து கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கையெழுத்துப் போடலாம். அல்லது போடாமலும் இருக்கலாம். இந்த எண்ணை அப்படியே முகவர்கள் தங்களின் படிவத்தில் குறித்துக் கொள்ளலாம். இதுதான் சட்டம்.
தேர்தல் ஆணையம் குளறுபடி செய்கிறதா?
அதன்பின்னாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை Form 17C உள்ள தரவுகளை வைத்துத் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். அப்படி ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரிகளும் பதிவேற்றம் செய்யச் செய்ய வாக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும்.
இறுதியில் தபால் ஓட்டுகள் எவ்வளவு என்று சேர்த்தால் ஒரு தொகுதிக்கான மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு எனத் தெரிந்துவிடும். இந்த வேலைக்கு என்று அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் அதிகாரி அமர்த்தப்பட்டுள்ளார். அனைவரும் இந்த வேலையைச் செய்தால், 3 மணிநேரத்தில் ஒரு தொகுதியில் மொத்த வாக்கு எண்ணிக்கை என்ன என்பது தெரிந்துவிடும்.
இதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு நடைமுறை. கடந்த தேர்தல்வரை இப்படித்தான் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்தத் தரவுகளை வெளியிடுவது சட்ட விரோதம் என்கிறார்கள். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக பணியிலிருந்த அதிகாரிகள் வெளியிட்டு வந்தார்களே? அது சட்ட விரோதமாக வெளியிடப்பட்டதா?
இதுவரை Form 17C ஐ தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவில்லையே ஏன்? அங்கேதான் பாஜகவின் சூழ்ச்சி இருக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
எந்த வாக்குச்சாவடியில் எல்லாம் பாஜகவுக்கு வாக்குப் பதிவு குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதோ அங்கே எல்லாம் திடீரென்று வாக்கு எண்ணிக்கை கூடியுள்ளது.
இப்படி ஒரு கோடிக்கும் மேல் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது எப்படி நடந்தது? இதை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கக் கூடாதா? சந்தேகத்திற்கான ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதை வைத்தாவது நீதிபதிகள் கேள்வி கேட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா?
Symbol loading unit தில்லுமுல்லு நடக்கிறதா?
இதுவரை தேர்தல் விதிமுறையை மீறியதாக 4 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன. அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்?
5 ஆயிரம் கோடி செலவழித்து 17 லட்சத்து 30 ஆயிரம் விவிபேட் வாங்கி இருக்கிறார்கள். 10.5 வாக்குச்சாவடிகளை அதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பதிவான அனைத்து வாக்குகளுக்கும் ரசீது அச்சாகி உள்ளது.

அச்சடிக்கப்பட்ட அந்த ரசீதுகளை எண்ணக்கூடாது என்று சொன்னால், பிறகு ஏன் இதை வைக்க வேண்டும்? இவ்வளவு கோடி செலவு செய்து வாங்க வேண்டும்? இது கேலிக் கூத்தாக இருக்கிறதா? இல்லையா?
Symbol loading unit இல்தான் மோசடியே நடக்கிறது. மொத்தம் 10.5 லட்சம் சாவடிகள் உள்ளன. ஆனால், 3500 Symbol loading unit தான் கைவசம் உள்ளன. இதில் நீங்கள் புரோகிராமிங் பாஜகவுக்கு ஆதரவாகச் செய்து பொறுத்திவிட்டால், அது பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பதிவு செய்துவிடும்.
இப்போது நமது சந்தேகத்தில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பது புரிந்துவிடும். Form 17C தரவுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தால், நாளை வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால் அதைக் கொண்டு முறையிட முடியும்.
வெளியிடாத பட்சத்தில் எதை வைத்து முறையிடுவது. எதிர்க்கட்சியினர் ஒரு எண்ணிக்கையைக் காட்டினால், தேர்தல் ஆணையம் அதை மாற்றி வேறு ஒரு எண்ணிக்கையைக் காட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? இது நீதிமன்றத்திற்குப் புரியாதா?" என்று ஆவேசமாகப் பல சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications