Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 வருட கோட்டையை மீட்கக் களம் இறங்கிய அகிலேஷ்! பாஜகவுக்குச் சரியான செக்! கடைசி நேர களேபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 ஆண்டுகள் கோட்டையான சமாஜ்வாதியின் கன்னௌஜ் தொகுதியை மீட்க அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளார்.

மொத்தம் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

TN Lok Sabha Election 2024 Will Akhilesh Yadav recover Kannauj constituency from BJP

கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியைப்போலவே இந்தமுறையும் பாஜக உபியில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது.

அதற்குக் காரணம், பெரிய மாநிலமான உபியில் எந்தக் கட்சி அதிக தொகுதிகளை அள்ளுகிறதோ, அந்தக் கட்சிதான் ஆளும் கட்சியாக ஆட்சியமைக்கும் என்பது ஒரு கணிப்பாக உள்ளது.

அதை வைத்துதான் உபி தேர்தல் மீது ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் விழுந்துள்ளது.

கடந்த 2019 தேர்தலில் பாஜக மொத்தம் 62 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பதிவு செய்திருந்தது. ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாகத் திகழ்ந்த இந்த மாநிலத்தில் கடந்த முறை வெறும் 1 தொகுதியில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றி பெற்றது.

அதாவது சோனியா காந்தி மட்டுமே ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். அமேதி தொகுதியில் களம் கண்டிருந்த ராகுல்காந்தி தோல்வியைத் தழுவி இருந்தார். அது நாடு முழுவதும் பெரிய பேசு பொருளாக மாறியது.

இந்தத் தேர்தலுக்காகப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி கூட, 'அமேதியிலிருந்து ராகுல் வெளியேற்றப்பட்டதைப் போல் இந்த முறை அவர் வயநாடு தொகுதியில் வெளியேற்றப்படுவார்' என்று சவால் விட்டுப் பேசி வருகிறார்.

TN Lok Sabha Election 2024 Will Akhilesh Yadav recover Kannauj constituency from BJP

உபியில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2019 தேர்தலில் மொத்தம் 10 தொகுதிகளில் வென்றிருந்தது. மாநிலக் கட்சியான அப்னா தள் என்று சொல்லக் கூடிய ஏடிஎஸ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறும் என்று கூறிவருகிறார் அகிலேஷ். பாஜகவுக்குச் சவால் விடும் மாநிலமாக உபியும் பீகாரும் இருக்கும் என்றும் கூறி வருகிறார்.

இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்தியா கூட்டணி சார்பாகத் தேர்தலை எதிர்கொள்கிறது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி பார்டி.

அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை முன்பே அறிவித்துவிட்டது சமாஜ்வாதி பார்டி.

இந்த முறை கன்னௌஜ் தொகுதியின் வேட்பாளராக லாலு பிரசாத் யாதவின் மருமகன் தேவ் பிரதாப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வரும் மே 13 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென்று வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

தேவ் பிரதாப் பதிலாக கன்னௌஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் களம் இறங்கப்பட்டுள்ளார்.

இந்தத் தொகுதி ஒரு காலத்தில் ஜனதா கட்சியின் கோட்டையாக விளங்கியது. 1977, 1980, 1989, 1991 ஆகிய வருடங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஜனதா பார்டியே வெற்றிவாகை சூடி இருந்தது.

முன்னதாக 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் ஒரே ஒருமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

TN Lok Sabha Election 2024 Will Akhilesh Yadav recover Kannauj constituency from BJP

அதன்பின்னர் 1998 தொடங்கி 2014 வரை இந்து சாமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக மாறியது. 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகுதியின் எம்பி முகமாக அலிகேஷ் யாதவ் தான் இருந்திருக்கிறார்..

பின்னர் 2012 இடைத்தேர்தலும் அடுத்து 2014 தேர்தலும் அகிலேஷ் யாத்வின் மனைவி டிம்பில் யாதவிடம் கை மாறியது இந்தத் தொகுதி. அவர் வெற்றியும் பெற்றார்.

மீண்டும் 2019இல் டிம்பில் போட்டியிட்டபோது பாஜக வேட்பாளர் சுப்ரத் பதக்துடன் மோதி கிட்டத்தட்ட 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அகிலேஷ் யாதவ் மனைவி ட்ம்பில் யாதவின் தோல்வியால் 19 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக நிகழ்ந்த கன்னௌஜ் தொகுதியில் லேசான ஒரு விரிசல் விழுந்தது.

இந்த முறை உபியில் அதிக இடங்களைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார் அகிலேஷ் யாதவ். 'இந்தியா' கூட்டணியின் வெற்றி முகம் இங்கிருந்து உதயமாக வேண்டும் என்று பல கணக்குகளைப் போட்டு வருகிறார்.

அதனால் தேர்தல் களத்திற்கு தலைமை தாங்க ஒரு வலிமையான முகம் தேவை என நினைத்த அலிகேஷ், கன்னௌஜ் தொகுதி வேட்பாளரை திடீரென்று மாற்றிவிட்டு அவரே களத்தில் குதித்துள்ளார்.

அகிலேஷ் யாதவே தேர்தல் களத்தில் வேட்பாளராகக் குதித்துள்ளதால், பாஜகவுக்கு லேசான பதற்றம் உண்டாகி உள்ளது. மேலும் சமாஜ்வாதி தொண்டர்கள் புதிய உற்சாகம் பெற்றுள்ளன.

பாஜகவிடம் இழந்த கன்னௌஜ் சமாஜ்வாதி கோட்டையை மீட்போம் என்று சூளுரை ஏற்றுள்ளனர்.

கன்னௌஜ் தொகுதியில் 5 லட்சம் உயர்சாதியினர் வாக்குகள் உள்ளன. 2 லட்சத்திற்கும் அதிகமான லோதி ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகள் உள்ளன. இந்த இரண்டு பலத்தையும் தாண்டி யாதவ் மற்று இஸ்லாமியர்களின் வாக்குகள் கிட்டத்தட்ட நான்கரை லட்சம் வரை உள்ளன.

TN Lok Sabha Election 2024 Will Akhilesh Yadav recover Kannauj constituency from BJP

இந்த வாக்குகளை மட்டும் ஒருங்கிணைத்து விட்டால் அகிலேஷ் அலேக்கா வெற்றிக் கனியைப் பறித்து விடுவார்.

கடந்த தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ராஜ்புத் மக்கள் அதற்கு எதிர்த் திசையில் இப்போது நிற்கின்றனர். அதனால் 2 லட்சம் வாக்குகள் அகிலேஷுக்குதான் என்று உறுதியாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.

அடுத்து யாதவர்கள் முஸ்லிம்களின் ஓட்டு. பிரதமர் மோடி ஏற்கெனவே முஸ்லிம் வெறுப்பு பிரச்சார சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆகவே அந்த ஓட்டுக்கள் பாஜக பக்கம் திரும்பாது. அந்தக் காற்றும் அகிலேஷ் திசையை நோக்கித்தான் வீசும்.

எப்படிப் பார்த்தாலும் 12 ஆண்டுகளாக சமாஜ்வாதி கோட்டையாகத் திகழ்ந்த கன்னௌஜ் தொகுதி மீண்டும் அகிலேஷ் பக்கம் வர இருக்கிறது என்றே பேசிக் கொள்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+