பிளஸ் 2 தேர்வு நடக்குமா? நடக்காதா? முதல்வர் விரைவில் அறிவிப்பு.. அறிக்கை சமர்பித்தார் அன்பில் மகேஷ்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? இல்லையா? என்பது குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு
அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் ஆலோசனை
இதற்கிடையே சிபி.எஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களிடன் பெற்றோர்களிடம் முதலில் ஆலோசனை நடத்தினார்கள்.

பெற்றோரின் கருத்துக்கள்
பெற்றோர்களின் கருத்துக்களும், அவர்களிடம் மாணவர்கள் கூறிய கருத்துக்களும் கேட்கப்பட்டன. இதனை தொடந்து மருத்துவ, மனோதத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அவர்கள் கூறிய கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சி உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடைபெற்றது.

அறிக்கை தயாரிப்பு
இதில் சில கட்சிகள் தேர்வை நடத்தலாம் என்று கூறின. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டது. இவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அதில் பதியப்பட்டது.

முதல்வர் விரைவில் அறிவிப்பார்
இந்த நிலையில் இந்த அறிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை சரம்பித்தார். ஆலோசனையின்போது அனைவரும் கூறிய கருத்துக்களை முதல்வரிடம் அவர் விளக்கினார். இனி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வைத்து ஒரு முடிவெடுப்பார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? இல்லையா? என்பது குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications