ஓ.. தப்பா பேசிட்டேன்.. திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்ற பேச்சு.. சட்டசபையில் சிரிப்பலை!
சென்னை: 2019-2020ம் ஆண்டு மானியக்கோரிக்கை என்பதற்கு பதில் 2010-2011 மானியக்கோரிக்கை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன். எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.

வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்றுவிடுகிறது. இப்போதுகூட அப்படிதான் ஒரு சமாச்சாரம் நடந்து உள்ளது.
சட்டசபையில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்து பேச தொடங்கினார். அப்போது, "2010-11ம் ஆண்டு மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் நான் பதில் அளித்து பேசுகிறேன்"என்று சீரியஸாக பேச ஆரம்பித்தார்.
உடனே திமுக எம்எல்ஏக்கள், "2010-11 இல்லை.. 2019-2020ம் ஆண்டு என்று பேசுங்கள்" என்று சத்தமாக சொன்னார்கள். உடனே அமைச்சரும், "ஓ.. தவறாக சொல்லிவிட்டேன்.. 2019-2020ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகிறேன்" என்றார். இதைதொடர்ந்து திண்டுக்கல்லார் பேச ஆரம்பித்தாலும், அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கொஞ்சநேரம் ஆகிவிட்டது.
இருந்தாலும், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஒரு மூத்த அரசியல் தலைவர், அதிலும் அமைச்சர்.. இப்படி உளறி வருவது தொண்டர்களுக்கு இன்னும் அதிர்ச்சியைதான் தந்து வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications