சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதாவின் வீடியோ- எனக்கு தொடர்பு இல்லை:அமைச்சர் பாண்டியராஜன்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் அனிதா வீடியோ தம்முடைய ட்விட்டர் கணக்கில் பதிவேற்றப்பட்டதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

2017-ல் நீட் தேர்வு முறையால் தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாணவி அனிதா. இன்று அமைச்சர் பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் அரியலூர் அனிதா, அதிமுகவை ஆதரிப்பது போல ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

TN Minister Ma Foi Pandiarajan explains on Anitha Video

இது தொடர்பாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் பாண்டியராஜன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

TN Minister Ma Foi Pandiarajan explains on Anitha Video

அந்த வீடியோவில், அன்பார்ந்த நண்பர்களே இன்று காலை என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து நீட் தொடர்பான ஒரு ட்வீட் போடப்பட்டிருக்கிறது. அந்த ட்வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த ட்வீட் எப்படி போடப்பட்டது என்பதை கண்டறிந்து அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைமில் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம் என அமைச்சர் மாஃபா பான்டியராஜன் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu Minister Ma Foi Pandiarajan has explained on Neet Anitha Video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X