ஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எங்கேயும் சொல்லவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எப்போதும் தாம் சொல்லவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன்பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் வசிப்போருக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும்.

நீட் நிலைப்பாடு
நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தேர்வுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

நீட்- நீதிபதி ராஜன் குழு
நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு பத்து நாட்களில் தங்கள் அறிக்கையை சமர்பிக்க உள்ளது. அதன்பின்னர் முதல்வர் முடிவு எடுப்பார். தற்போதைய நிலையில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்.. நீட் தேர்வு வரவில்லை என்றால் மகிழ்ச்சி. ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக தேர்வு என அறிவித்துவிட்டால் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே படிக்க சொல்கிறோம்.

கொரோனா தடுப்பூசிகள்
மத்திய அரசு ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு தருவதாக சொன்ன தடுப்பூசியில் மீதமுள்ள 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். குறித்து விளக்கம்
கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தான் நானும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டேனே தவிர ஆர்.எஸ்.எஸ். ஒரு மக்கள் இயக்கம் என்று எப்போதும் கூறியது இல்லை. இவ்வாறு மா. சுப்பிரமணியன் கூறினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications