"தள்ளிவிட்டீங்களே நியாபகம் இருக்கா.. கொடுமை".. விஜயபாஸ்கரை பட்டுன்னு வளைத்த அமைச்சர்.. நச் பதிலடி!
சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் அரசு அதிகாரிகள் யாரும் சுதந்திரமாக இல்லை, எல்லா திட்டத்திலும் அமைச்சர்களின் தலையீடு இருப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி இருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி சிறிய சிறிய திறப்பு விழாக்களில் கூட அமைச்சர்கள் தலையீடு உள்ளது.
அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படவில்லை என்று விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி இருந்தார். அரசு அதிகாரிகளை சுயமாக முடிவு எடுக்க திமுக அரசு விடுவது இல்லை, நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் அரசு தலையிடுகிறது என்று விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டி இருந்தார்.

பதிலடி
இந்த நிலையில் விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில், விஜயபாஸ்கர் சொல்வது வியப்பாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் பல ஜனநாகய கொடுமைகள் நடந்தன. அது போன்ற கொடுமைகள் திமுக ஆட்சியில் நடக்காது. அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.

திட்டம்
விஜயபாஸ்கர் எங்களுக்கு பாடம் எடுக்கிறார். அதிமுக ஆட்சியில்தான் அரசின் எல்லா திட்டத்திலும் அக்கட்சியினர் தலையிட்டனர் . திமுக ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். எதோ நாங்கள் நெல்கொள்முதல் நிலையங்களை திறப்பதில் தலையிடுவதாக விஜயபாஸ்கர் பேசுகிறார்.

உறுப்பினர்கள்
ஒன்றிய உறுப்பினர்கள் திறந்து வைத்த நெல் கொள்முதல் நிலையங்களை விஜயபாஸ்கர் போய் மீண்டும் திறந்து வைத்து உள்ளார். ஏற்கனவே திறந்த மையத்தை திறந்து விட்டு அவர் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

அதிமுக
இதே விஷயத்தை அதிமுக ஆட்சியில் நாங்கள் இப்படி செய்தால் விடுவார்களா? எங்களை வீட்டுக்கு உள்ளேயே வைத்து பூட்டி இருப்பார்கள். அரசு விழாவிற்கு வாங்க என்று அழைப்பார்கள். ஆனால் விழாவிற்கு செல்லும் வழியிலேயே கைது செய்வார்கள். எங்களை எம்எல்ஏவாக செயல்பட கூட அவர்கள் விட்டது இல்லை. அப்படி இருக்கும் போது அதிகார தலையிடல் பற்றி அவர் பேசலாமா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications