Newsmakers 2018: செல்லூர் ராஜூ யாருன்னு கேட்டா.. சின்ன குழந்தையும் சிலிர்த்து சொல்லும்!
அமைச்சர் செல்லூர் ராஜூவின் மறக்க முடியாத இந்த வருட செயல்கள்
சென்னை: இந்த ஆண்டில் மறக்க முடியாத தமிழக அமைச்சர்களில் முதன்மையானவர், முக்கியமானவர், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவார்.
மறைந்த மதுரை அதிமுக ஜாம்பவான் பழக்கடை பாண்டியன் கடையில் லோடுமேனாக வேலை பார்த்தவர்தான் ராஜு. ஆனாலும் கடின உழைப்பால் கட்சியில் மேலே வந்துவிட்டார்.
கட்சிக்கு வந்து பதவியை பிடித்ததும் அவரது துறைக்கு அவர் என்ன செய்தார், கூட்டுறவு துறையின் வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன என்று நமக்கு நினைவுக்கு இந்த 2 ஆண்டுகளில் வரவே இல்லை.

உருவபொம்மை
மாறாக, அவர் சொல்லிவரும் செய்து வரும் விஷயங்கள்தான் நம்மை திக்குமுக்காட செய்து வருகின்றன. இதை ஜெயலலிதா இறந்த முதலாம் நினைவு தினத்தன்று அவரது உருவபொம்மையை படுக்க வைத்து நடத்திய ஊர்வலத்திலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகுதான் என்.டி.டி.வி முதல் பிபிசி வரை என தேசிய, சர்வதேச ஊடகங்கள் வரை ஃபேமஸ் ஆகும் அளவுக்கு தெர்மாகோல் சிஸ்டத்தை கொண்டு வந்தார்.

தெர்மாகோல்கள்
அமைச்சரே வைகை அணைக்கு நேரடியாக வந்திறங்கி செல்லோடேப்பால் ஒட்டி வைக்கப்பட்ட தெர்மாகோல்களை அணையில் விட்டார். பிறகு அவைகள் பரிசல்களிலும் சென்று அணையில் மிதக்க விடப்பட்டன. ஆனால் விட்ட சில நிமிஷங்களிலேயே சுழட்டியடித்த காற்று காரணமாக தாக்கு பிடிக்காமல் எல்லா தெர்மாகோல்களும் கரை ஒதுங்கின.

ரப்பர் பந்துகள்
இதை அனைத்து மீடியாக்களும் மட்டுமல்ல, வாட்ஸ்அப், கார்ட்டூன், மீம்ஸ்கள் என ஒட்டுமொத்த இணையதளமே நாறுநாறாக கிழித்து தொங்கவிட்டன. இந்த திட்டம் தோல்வியடைந்ததால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, நீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துகள் கொண்டு வைகை அணை மூடப்படும் என்று ஒரு ஷாக் பேட்டி அளித்தார்.

வாசலில் சாணம்
இதனையடுத்து டெங்கு பாதிப்பால் மக்கள் கொத்து கொத்தாக செத்து கொண்டிருந்தால், வாசலில் சாணத்தை தெளித்தால் டெங்கு நெருங்காது என்று சொல்லி எரியும் விளக்கில் எண்ணெய்யை ஊத்தி விட்டு போனார். இப்படி பேசி பேசியே இவர் ஒரு விஞ்ஞானி அமைச்சர் என்ற ரேஞ்சுக்கு மக்கள் அவருக்கு பட்டப்பெயரை வைத்து விட்டார்கள்.

மிக்சி - கிரைண்டர்
இவரது மேடை பேச்சுக்களோ அதற்கு மேல் இருக்கும்! இலவச மிக்சி கிரைண்டர் திட்டம் மூலம் மாமியார், மருமகள் சண்டையை போக்கியவர் ஜெயலலிதா என்பது முதல், எம்ஜிஆர் கட்சிக்கு அண்ணாவின் பெயரை வைத்திருக்காவிட்டால் அவரை யாருக்கும் தெரிந்திருக்காது என்பது உட்பட ஹாட் பேச்சுக்கள் தமிழக மக்களிடம் வலம் வந்தன.

அரசியல் தந்திரம்
ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ, இதையெல்லாம் அறியாமல் பேசுவதாக மக்கள் நினைத்து கொண்டிருக்கலாம். ஆனால் அது தவறு. இது ஒரு அரசியல் தந்திரம். பிஎஸ்சி படித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, கன்னாபின்னாவென்று பேசினாலும், லாஜிக் இல்லாமல் பேசினாலும், அவரையும், தன் கட்சியையும் மக்களை கவனிக்கும் வண்ணம் தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார் என்பதே இதில் பொதிந்திருக்கும் உண்மை.

கவலையே கிடையாது
உளறலே ஆனாலும் எதையாவது பேசி மக்களிடம் தன் இருப்பையும், தன் பெயரையும், தன் ஆட்சியையும் நினைவுபடுத்தி கொண்டே வருவதுகூட ஒரு தந்திரம்தான். எப்படியாவது நாம் பேசப்பட்டு விட வேண்டும் என்று நினைத்து விடுகிறார். அதன்மூலம் வரும் பாதிப்புகளை பற்றியெல்லாம் இவர் கவலைப்படுவதே கிடையாது.

யூடியூப் அமைச்சர்
மற்றொரு விஷயம், இதுவரை பதவி வகித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்களிலேயே இந்த அளவுக்கு பெயர் வாங்கிய அமைச்சரும் செல்லூர் ராஜூதான். எனவே யூடியூப் அமைச்சர், விஞ்ஞான அமைச்சர் என்ற பெயரை பெற்ற செல்லூர் ராஜூ 2018 என்று மட்டும் இல்லை, இனி வரும் வருடங்களிலும் பேசப்பட்டேதான் வருவார் என்பது உண்மை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications