செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் 60 எம்எல்ஏக்களாம்.. கொளுத்தி போடும் சீமான்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் திமுக கட்சி உள்பட 60 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாதம் மாதம் செந்தில் பாலாஜி பணம் கொடுக்கிறார் என்று சீமான் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் 60 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் செந்தில்பாலாஜி விசாரணையில் வாய்திறந்தால் தனக்கு ஆபத்து ஏற்படுத்தும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தி செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் திமுக கட்சி உள்பட 60 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மாதம் மாதம் செந்தில் பாலாஜி பணம் கொடுக்கிறார்.
செந்தில் பாலாஜி விசாரணையின் போது வாய் திறந்தால் முதல்வர் உள்பட பலருக்க்கு சிக்கல் ஏற்படும் என்ற அச்சத்தால் இதில் தமிழக அரசு வேகம் காட்டுகிறது. செந்தில் பாலாஜி ஊழல் மூலமாக பெற்ற பணத்தை எப்படி பிரித்துக் கொடுத்தார் என்பது வெளிவரும். இதனால், முதல்வர் மு.க ஸ்டாலின் அச்சப்படுகிறார்" என்றார். தொடர்ந்து நடிகர் விஜய் பேச்சு குறித்து பேசிய சீமான், நான் பேசுவதை தான் விஜய் பேசி வருகிறார். எனவே விஜய் பேச்சு எங்களுக்கு வலு சேர்க்கும். வாக்குக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல் உருவாகிறது.
காசு கொடுத்து வாக்கு பெற்ற எந்த அரசியல்வாதிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் எண்ணம் வராது. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு நாங்கள் வந்துவிட்டோம். எனவே, அவர் வேறு நான் வேறு இல்லை. எங்களுக்குள் இருக்கும் பந்தம் அண்ணன் தம்பி மட்டும் தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications