வார்த்தையை விட்ட திமுக ஐடி விங்.. “டோஸ்” விட்ட டிஆர்பி ராஜா! தலைவர் பொறுத்துக்கவே மாட்டாரு என ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளருக்கு திமுகவினர் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்து உள்ளார்.

சென்னை வெள்ள பாதிப்புகளை பதிவு செய்து வந்த ஷபீர் அகமது என்ற பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் சமூக வலைதளத்தில், திமுகவை சேர்ந்தவர்கள் பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ் தளத்தின் ஸ்பேசில் உரையாடலில் பங்கேற்ற திமுகவினர், பத்திரிகையாளர் ஷபீர் அகமதை குறிப்பிட்டு, "உன்னை ஒழித்துவிட வேண்டும்", "உன்னை நிம்மதியாக வாழ விடக் கூடாது" என்று மிரட்டல் விடுத்து இருந்தனர். இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் சங்கம், சென்னை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.

 TN Minister TRB Raja advice to DMK IT Wing on threatening journalists

மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "திமுக நிர்வாகிகள் வெளிப்படுத்தி உள்ள இந்த கருத்து, பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் மக்கள் படும் துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் பணியை கொச்சைப்படுத்துவதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதுமாகும். ஆகவே, பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவுக்கு எதிராக தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசிய திமுக நிர்வாகிகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளது. இதேபோல் பத்திரிகையாளர்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் திமுக ஐடி விங் செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான டிஆர்பி ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "மறுப்புகள் உள்ளிட்டவற்ற திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கடுமையான விதிகளை வகுத்து உள்ளது. ஏற்கனவே தவறானது என நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டை எதிர் தரப்பில் இருப்பவர் மீது வைத்தாலும் கூட, தலைவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். தவறான அறிக்கைகளை தலைவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். எந்த காரணத்திற்காகவும் யார் மீது அடிப்படை இன்றி அவதூறு பரப்புவதை திமுக வரவேற்காது. தவறான தகவல்கள் மற்றும் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக எப்போதும் துணையாக இருக்கும்." என்றார்.

இந்த ட்வீட்டுக்கு பெண் பத்திரிகையாளர் நன்றி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த டிஆர்பி ராஜா, "விபரங்களை தெளிவுபடுத்துவதற்காக தொலைபேசியை எடுப்பதன் மூலம் ஊடகங்களும் அதையே செய்வதாக சில நேரங்களில் நாங்கள் நம்புகிறோம். தற்போதைய பிரச்சனையில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். எங்கள் தொலைபேசிகள், மிக முக்கியமாக எங்கள் மனங்கள் "ஆக்கபூர்வமான விமர்சனம்" மற்றும் "முக்கியமான உரையாடல்" போன்றவற்றிற்கு 4 வது தூணுக்கும் முதலமைச்சருக்கும் இடையே திறந்து இருக்கும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+