நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்.. சிகிச்சை உதவிக்கு உறுதி
சென்னை: இயற்கை விவசாய சாதனையாளர் நெல் ஜெயராமனை அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் கிராமத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி ஜெயராமன். இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கி 150க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து விளைவித்து சாதித்தவர் என்பதால், நெல் ஜெயராமன் என்ற பெயர் பெற்றுள்ளார்.

இவரது சாதனைக்காக பல விருதுகளையும் பெற்றவர், நெல் ஜெயராமன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
நெல் ஜெயராமன் பொருளாதார நிலையை கருதி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரை கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் நேரில் சந்தித்து அவரது சிகிச்சைக்கு உதவி செய்து வருகின்றனர்.
நடிகர் கார்த்தி, சத்யராஜ், சூரி ஆகிய திரையுலக பிரபலங்கள் இதில் முக்கியமானவர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ஒருபடி மேலே போய், நெல் ஜெயராமனை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும், நெல் ஜெயராமனை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர். நெல் ஜெயராமனுக்கு வேண்டிய சிகிச்சைக்கான உதவியை அரசு செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியொன்றில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications