அடடா.. சூப்பர்.. ஒரேமாதிரி களமிறங்கிய 5 முதல்வர் வேட்பாளர்கள்.. கடைசி நாள் பிரச்சாரத்தில் சுவாரசியம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி நாள் பிரச்சாரம் இன்று நடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கியமான ஸ்டார் வேட்பாளர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரச்சார திட்டத்தை வகுத்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாதபடி இந்த முறை 5 முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். முக்கியமான 5 கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்து தமிழக தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்ய கூட்டணி, நாம் தமிழர் தனியாக என்று 5 முனை மோதல் இந்த முறை நடக்கிறது.
இதனால் பல்வேறு தொகுதிகளில் அதிமுக vs திமுக என்று இருந்த மோதல் மாறி கடுமையான இழுபறி நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அமமுக, மநீம, நாம் தமிழர் போன்ற கட்சிகள்தான் பல்வேறு தொகுதிகளில் கேம் சேஞ்சர்களாக இருக்க போகின்றன.

எப்படி
தமிழக சட்டசபை தேர்தல் 5 முக்கியமான முதல்வர் வேட்பாளர்கள் களமிறங்குவது இதுவே முதல்முறை. இதில் மு . க ஸ்டாலின் திமுக சார்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

பிரச்சாரம்
இவர்கள் எல்லோரும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் தங்கள் கூட்டணிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர் . தங்களின் கட்சிக்காக தனியாளாக மாநிலம் முழுக்க இவர்கள் தேர்தல் நேரத்தில் சுழன்று சுழன்று பிரச்சாரம் . அதிலும் முதல்வர் பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தினமும் 5 மாவட்டங்களுக்கு மேல் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முடிவு
இந்த நிலையில் இன்று இறுதி நாள் பிரச்சாரத்தை முதலமைச்சர் வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் நிறைவு செய்கின்றனர். எல்லோரும் ஒரே மாதிரியாக தங்களின் சொந்த தொகுதியில் இன்று கடைசி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இன்று மாலை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல் கோவை தெற்கில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்கிறார்.

பிரச்சாரம்
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும், சீமான் திருவெற்றியூர் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்கள்... சரியாக சொல்லிவைத்தபடி தங்களின் சொந்த தொகுதியில் இவர்கள் எல்லோரும் தேர்தல் பிரச்சாரத்தை கடைசி நாளில் மேற்கொள்கிறார்கள். இன்று மாலை 7 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிகிறது.

கடைசி நாள்
கடைசி நாள் தேர்தல் பிரச்சாரம் என்பதால் களம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. இதில் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்கள் சொந்த தொகுதியில் இதுவரை பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை. மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்தியதால் இங்கு இவர்களால் பெரிதாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தங்களின் சொந்த தொகுதியில் பிரச்சாரம் செய்து பிரச்சாரத்தை முடிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications